உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மனத்தின் தோற்றம்



வாழ்ந்த மக்கள் சிறிது சிறிதாக நாகரிகம் பெறப் பெற நல்ல சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நல்ல சூழ்நிலையின் மாற்ற முடியாத இறுக்கமே நல்ல மரபுநிலை என்பது. அதே போல், தீய சூழ்நிலையின் மாற்ற முடியாத இறுக்கமே கெட்ட மரபுநிலை என்பது. மரபுநிலையின் தாய் சூழ்நிலையே.

‘உயிர்கள் சார்ந்ததன் வண்ணம்’ எனச் சைவ சித்தாந்தம் கூறுகிறது.

மக்களின் பொதுமனப் போக்குகளுள் (Generał Tendencies) ‘பின்பற்றல்’ (Imitation) என்பது ஒன்று. குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரையும் மக்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் பிறரைப் பின் பற்றுவதைக் காண்கிறோம். இது சூழ்நிலையின் பாற்பட்டதே.

ஒருவர் தீய இனத்துடன் தொடர்ந்து பழகினால் அவரது அறிவு தீயதாகவே செயல்படும். ஒருவர் நல்ல இனத்தோடு தொடர்ந்து பழகினால் அவரது அறிவு நல்லதாகவே செயல்படும். ஈண்டு இனம் என்பது சாதி குலத்தை யன்று - மக்கள் குழுவே ஈண்டு இனம் எனப்படுவது.

நிலத்தின் இயல்புக்கு ஏற்ப நீர் திரிவது போல, மாந்தர்க்குப் பழகும் இனத்தின் இயல்பினதாகவே அறிவு செயல்படும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்:-

“கிலத்தியல்பால் நீர்திரிங் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பதாகும் அறிவு” (425)

மேலும் கூறுகிறார்: ஒருவன் இத்தகையவன் என்பதை அவன் பழகும் இனத்தைக்கொண்டு கூறிவிடலாம். அறிவு இனத்துளதாகும்;

“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்” (453)