உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

145



சிவப்பிரகாசரும் கம்பரும் இவ்வாறு கூறியிருப்பதில் உள்ள உட்கருத்து என்ன?

வரலாற்றாசிரியன் நடந்ததை மட்டும் கூறுபவன். இலக்கிய ஆசிரியனோ, இருந்ததைக் கொண்டு, மேலும் இருக்க வேண்டியதைக் கூறுபவன்.

இந்த அடிப்படையில், ஒரு நாட்டில் உடை, உணவு, உறையுள், செல்வம் முதலியன குறையின்றி நிறைந்திருக்க வேண்டும் என அடிகளார் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.

இதே அடிப்படையில், ஒரு நாடு என்றால், அதில், வறுமை, பகை, பொய், அறியாமை முதலியவை கூடா எனக் கம்பர் மறைமுகமாக வலியுறுத்தி யுள்ளார். இத்தகைய கருத்து வெளிப்பாடுகள் புதுமையா யுள்ளன வன்றோ?

5. சுவையான சில செய்திகள்

5.1 வெறுத்து விரும்பல்

பொழிலின் குளிர்ச்சி மிகுதி புலவர்களால் பலவாறு புனையப்படும். வானளாவிய குளிர்ந்த பொழில் ஒன்றின் வழியாக ஞாயிறு செல்வதால், வெப்பமான ஞாயிற்றை இழுத்துச் செல்லும் குதிரைகள் ஒரளவு களைப்பு குறைந்து மீண்டும் செல்லும் ஆற்றலைப் பெற்றனவாம் எனக் கம்பர் மராமரப் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:

“திக்கும் வானமும் செறிந்த அத்தருகிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்கில இரவி தேர்ப்புரவி” (5)

என்பது பாடல்.

சிவப்பிரகாசர் வசவண்ணர் கதியில், ஒரு பொழிலின் குளிர்ச்சியின் மிகுதியைப் பின்வருமாறு புனைந்துள்ளார்: கடுமையான வெயிலில் வழி நடந்து வெப்பம் தாங்காமல்