பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மனத்தின் தோற்றம்



களைப்படைந்து அந்தப் பொழிலில் வந்து தங்கினவர்கள், அந்தப் பொழிலின் குளிர்ச்சி மிகுதியால் உடல் நடுங்கி மீண்டும் வெயிலை விரும்பினார்களாம். பாட்டு:

“தனைவிரும்பி வந்துஅடைந்தவர் தம்மைமுன் வெறுத்த
தினகரன்கதிர் விரும்புறச் செய்து. பொழில் திகழ்வது” (14-11)

5.2 பிடியின் ஊடல்

மக்களினத்தில், கணவன் மற்றொரு பெண்ணை விரும்புவதாகத் தெரிந்தால் மனைவி ஊடல் கொள்ளும் செயல், அஃறிணை உயிரிகளிடமும் நிகழும் போலும், இது பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

ஒரு மாடத்தில் பல பழ வகைகளும் கிளி முதலிய பறவை வகைகளும் பொம்மையாகச் செய்து வைக்கப் பெற்றிருந்தன. உயிர் உள்ள ஓர் ஆண் கிளி, பொம்மை வடிவில் உள்ள பெண் கிளியின் பக்கத்தில் நின்று அங்கிருந்த பொம்மைக் கனியை உண்மைக் கனி என்று கொத்திற்றாம். எட்டிய தொலைவில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் கிளி, தன் கணவனாகிய ஆண் கிளி இன்னொரு பெண் கிளியை விரும்பி அதன் அருகில் நிற்பதாக எண்ணி ஊடல் கொண்டதாம். இவ்வாறு பல கற்பனைகள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சிவப்பிரகாசரின் படைப்பில் உள்ள இத்தகைய ஊடல் ஒன்றைக் காண்பாம்:

திருப்பருப்பதம் என்னும் மலைச் சாரலில், ஒரு களிறு (ஆண் யானை) தளிர் இலைகளைப் பறித்துத் தேனில் தோய்த்துப் பிடியின் (பெண் யானையின்) வாயில் கொடுத்துக் கொண்டிருந்ததாம். இந்தக் காட்சி, பக்கத்தில் இருந்த பளிங்கு அறைச் சுவரில் தெரிந்ததாம். தளிரை உண்டுகொண்டிருந்த பெண்யானை பளிங்குச் சுவரில் இதைக் கண்டு, தன் கணவனாகிய களிறுதான் வேறொரு