சுந்தர சண்முகனார்
151
5.6 மருங்குல் வெளி
தெருவில் செல்லும் இராமனைக் காணப் பெண்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். முன் வரிசையில் நின்றவர்கள் எளிதாக இராமனைக் காண முடிந்ததாம். பின் வரிசையில் நின்றவளுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் மறைத்துக்கொண்டிருந்ததால் காணமுடிய வில்லையாம். அதாவது, முன்வரிசையில் நின்றவர்களின் இடுப்புக்கு மேல் உள்ள பருத்த முலை, அடர்ந்த கூந்தல், இடுப்பின் கீழே உள்ள அல்குல் பரப்பு ஆகியவை மறைத்துக்கொண்டிருந் தனவாம். ஆனால் அவர்களின் இடை மெலிந்திருந்ததால், முன் வரிசையில் நின்ற இரண்டு பெண்களின் இடையின் நடுவே உள்ள இடைவெளி வழியாகப் பின் வரிசையில் உள்ளவள் இராமனைக் கண்டாளாம். பாடல்! இதனைக் கம்பர், பால காண்டம் உலாவியல் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:
- “கருங்குழல் பாரம் வார்கொள்
- கனமுலை கலைசூழ் அல்குல்
- நெருங்கின மறைப்ப ஆண்டுஓர்
- நீக்கிடம் பெறாது விம்மும்
- பெருந்தடங் கண்ணி காணும்
- பேரெழில் ஆசை தூண்ட
- மருங்குலின் வெளிக ளுடே
- வள்ளலை நோக்கு கின்றாள்” (17)
- “கருங்குழல் பாரம் வார்கொள்
என்பது பாடல். பிரபுலிங்க லீலைக்கு வருவோம்:
இளவரசியாகிய மாயை என்பவள், ஆடவர்கள் வராதபடி வாயிலை அடைத்துக் கோயிலின் ஒரு புறம் நடனம் ஆடினாள். இதைக் காண விரும்பிய இளைஞர்களுள் சிலர் மதிலிலுள்ள துளைவழியாகக் கண்டார்களாம். சிலர் மதில் ஒரம் இடம் கிடைக்காமையால், நின்றிருந்தவர் களின் தோள்மேல் ஏறிக் கொண்டு மதிலின் மேல் துளை