பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
152
மனத்தின் தோற்றம்
 


வழியாகப் பார்த்தார்களாம். (திரைப்பட அரங்கில் கட்டணச் சீட்டு (டிக்கெட்) வாங்க, கும்பலாக நின்றிருப்பவர்களின் தலைமேல் ஒருவர் கவிழ்ந்து படுத்துக் கொண்டு நீந்திச் செல்வதைக் காணலாம்).

இந்த இளைஞர்கள் என்ன கண்டார்கள். மாயையின் மருங்குல் (இடை) என்னும் வெற்றுவெளியைக் கண்டார்களாம்:

“பொன்னெயிலின் ஒன்றிய புழைக்குள் முகம்வைத்தும்
துன்னி முனம் கின்றவர் தோளிடை இவர்ந்தும்
மின்னென நடம்புரியும் மெல்லியல் மருங்குல்
என்னும் வெளிகானிய இடர்ப்படுவர் மைந்தர்” (4-55)

பெண்கட்கு இடை சிறுத்திருப்பதால், இடையே இல்லை எனக் கற்பனையாகக் கூறுவது இலக்கியமரபு. அவ்வாறே, கம்பர் மருங்குலின் வெளி என்றும், சிவப்பிரகாசர் 'மருங்குல் என்னும் வெளி என்றும் கூறியுள்ளனர்.

இடுப்பு மடிப்பு விழுந்திருக்கும் பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்றபடி உண்டி சுருங்கி மெல்லிய இடுப்புடன் இருப்பவர்கட்கு மகப்பேறு எளிதாயிருக்கும்; குழந்தை விரைவில் வெளியில் வரும்படியான அழுத்தம் (Pressure) உண்டாகும் என்றெல்லாம் கருத்து கூறப்படுகிறது.

6.6 சொல்லாட்சி

6.1 அள்ளிக் கொள்ளும் அழகு

அல்லமப் பிரவுவை “அள்ளிக் கொள்ளும் பேரழகன்” (51-31)

என்று அடிகளார் குறிப்பிட்டுள்ளார். அழகை அள்ள முடியாது. மிகுந்த அழகு என்னும் பொருளில் இந்தச் சொல்லாட்சி கையாளப்பட்டுச் சுவை பயக்கிறது.