சுந்தர சண்முகனார்
153
6.2 நீங்கிய உடையாள்
அக்கமாதேவி என்பவள் துறவு முதிர்ச்சியால் உடையின்றிச் சென்றாளாம். இதை, ‘நீங்கிய உடையாள்’ என எதிர் மறுக்கும் உடன்பாட்டால் கூறியுள்ளார். இது, அகநானூற்றில உள்ள ‘சென்று சேக்கல்லாப் புள்ள’ (42-8) என்பது போலவும், திரு முருகாற்றுப் படையில் உள்ள ‘கழிந்த உண்டியர்’ (4- 31) என்பது போலவும், கம்ப ராமாயணத்தில் உள்ள ‘பயில்வு இல் கல்வியார்’ (4-3-32) என்பது போலவும் உள்ள சொல்லாட்சியாகும். இஃது ஒர் இனிய இலக்கிய நடையாகும்.
6.3 பறந்திடா வண்டு
கொக்கு என்னும் சொல்லுக்கு, மாமரம், பறக்கும் ஒரு பறவை என்ற பொருள்கள் உண்டு. பறவாக் கொக்கு என்றால், இத்தொடர் பறக்காத மாமரத்தைக் குறிக்கும். அதுபோல், வண்டு என்னும் சொல்லுக்கு, வளையல், பறக்கும் வண்டு என்னும் பொருள்கள் உண்டு. பறந்திடா வண்டு என்றால், இத்தொடர், பறக்காத வளையவைக் குறிக்கும். சிவப்பிரகாசர் கைலாச கதியில் உள்ள.
- “பறந்திடா மணிவண்டு படுமலர்” (23)
என்னும் பாடலில் ‘பறந்திடா மணி வண்டு’ என வளையலைக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சுவையான சொல்லாட்சியாகும். (மணி = அழகு. மலர் = மலர் போன்ற கை)
6.4 எட்டிப் பார்த்தல்
மாயை வளர்ந்து வருகிறாள். மார்பில் கொங்கைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. மாயையின் பேரழகால் துறவிகளாம் பறவைகளும் காம மயக்க வலையில் விழுவார்களாம். துறவிகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை