இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
மனத்தின் தோற்றம்
அறிய மார்பில் இருந்து கொண்டு முலைகள் எட்டிப் பார்த்தனவாம்.
மார்பில் முலைகள் சிறிய அளவில் முளைத்திருப்பதை, இவ்வாறு ‘எட்டிப் பார்த்தல்’ என்னும் சொல்லாட்சியால் கூறி இலக்கியச் சுவை தந்துள்ளார் அடிகளார். பாடல்:
- “முட்டித் துறவாம் பறவை மயல்
- வலையில் படுதல் மெல்ல மறைந்து
- எட்டிப் பார்ப்பு என முகங்கொண்டு
- எழுந்தன மார்பில் இள முலைகள்” (3-56)
- “முட்டித் துறவாம் பறவை மயல்
என்பது பாடல் பகுதி. வலையில் பறவை விழுவதை மறைந்திருந்து தானே வேடர்கள் பார்ப்பார்கள். இங்கே முலைகள் மறைந்திருத்தல் என்பது மேலாடையால் மூடப்பட்டிருப்பதாகும். இந்தச் சொல்லாட்சியை அடிப் படையாகக் கொண்டு, அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் நூலில் இந்த அமைப்பு பின்வருமாறு புனையப் பட்டுள்ளது.
- “இடமது சிறிதே ஈந்ததும் பெரிய
- மடமுழு தினையும் மடக்குவோர் மான
- எட்டிப் பார்க்க இடம் சிறிதளவே
- விட்ட மார்பின் வியலிடம் முழுமையும்
- தட்டிக் கொண்ட தளதள ஈகில்கள்” (2:21-25)
என்பது பாடல் பகுதி. இத்தகைய நயமான சொல்லாட்சிகள் பல, நூலில் இடம் பெற்றுள்ளன. -
7. திருக்குறள் ஆட்சி
திருக்குறள் ஆட்சி பன்னிரண்டுக்குமேல் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன. ஈண்டு இரண்டு மட்டும் கtrண்பாம்: