பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
163
 


3. மிக்க பெருமைக்கு உரிய செயல், செய்வதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக நொந்து (பழித்து) விட்டுவிடலாகாது.

4. ஒரு செயல் முடிப்பதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக அதன் உயர்வினைப் புறக்கணிக்கக்கட்டாது.

5. ஒருவர் ஒரு செயலை நிறைவுபெற முடிக்காமல் குறையாய் விட்டிருப்பின், அதற்காக அவரைப் பழிக்க லாகாது; பின்னர்த் தொடர்ந்து முடிக்கலாம்.

6. செங்கோல் முறை தவறிய அரசனது நாட்டில் இருந்துகொண்டு அறிஞர்கள் அவனைப் பழித்துக்கொண் டிருப்பதில் பயனில்லை.

7. உதவி செய்யவேண்டிய உரிய சுற்றத்தார் உதவி செய்யாராயின், அதற்காக உயர்ந்தவர்கள் அவர்களைப் பழிக்காமல் பொறுத்துக் கொள்வர்.

8. முன்பின் அறியாத புதிய நாட்டிற்குச் சென்றால், அங்கே உள்ள பழக்க வழக்கங்களின் மாறுதலைக் கண்டு உயர்ந்தவர்கள் பழித்துரையார்.

9. வறியவன் வள்ளல்போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.

10. கீழ்மக்களின் இழி செயல்களைக் கண்டு, சிறந்த பெரியவர்கள் பழிக்காமல் - கண்டும் காணாமல் விலகி விடுவர்.

4. துவ்வாமை கூறும் பத்து உரைகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடைய வரிடம் உள்ள செல்வம், வறுமையைப் போலவே துய்க்கப் படாது (நுகரப்படாது).