உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

15



அதன் விளைவாக மறுநாளோ - எதிர் காலத்திலோ செய்யவேண்டியவை தொடர்பான சூழ்நிலையும், அவனுக்கு அப்போதிருக்கும் நிலைமை தொடர்பான சூழ்நிலையும், துக்கம் வராமல் ஏற்படும் தொல்லை காரணமான சூழ்நிலையும், இன்ன பிறவும், துலங்கல்களாக இருந்து கொண்டு, அவனைப் பலப்பல எண்ணங்களின் மீது துலங்கச் செய்கின்றன. எனவே, இதற்கு மனம் என ஒன்று தனியாக இருக்க வேண்டியதில்லை. ஆகவே, எவ்வாறு நோக்கினும், உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே - சிறப்பாக முளையின் இயக்கமே மன உணர்வாகும் என்பது வெளிப்படை.

மக்களாகிய உயர்திணை உயிரிகட்கேயன்றி, அஃறிணை, உயிரிகட்கும் துண்டல்-துலங்கல் செயல்பாடுகள் இருப் பதைப் பரக்கக் காணலாம். எனவே, அவையும் மன உணர்வு உடையன என்பது விளங்கும். அங்ஙனமாயின், அஃறினை உயிரிகளும் மக்களைப் போல் ஏன் சிறப்புச் செயல்கள் புரியவில்லை எனில், அவற்றிற்கு மக்களைப் போல், கைகள் உள்ள உடல் அமைப்பு இல்லை - என்பதே அதற்குரிய காரணமாகும். எனவே, கையே மனிதன்' என்னும் கொள்கை உறுதியாகிறது.

முடிவான கருத்து

மனம் என ஒன்று தனியாக இல்லை - மூளையின் இயக்கமே மனம் என்ப்படுகிறது - என்பது என் கருத்து. 1970ஆம் ஆண்டு என எண்ணுகிறேன் - புதுவைச் சமர்ச சுத்த சன்மார்க்க சங்கத்தில் ஒருநாள் சொற்பொழிவு செய்தபோது மனம் எனப்படுவது மூளையின் இயக்கமே என்றேன். எனக்குப் பின்னால், நன்றி கூற வந்த ஒருவர் என் கருத்தை மறுத்துப் பேசினார். பின்பு நான் அவரை மறுத்தேன். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி