168
மனத்தின் தோற்றம்
5. உழைப்பினால் உண்டாகும் துன்பத்தைப் (சிரமத் தைப்) பொருட்படுத்தாது உழைப்பவர்க்கு இன்பம் கிடைப்பது எளிது.
6. உழைக்காமல் இன்பத்தை மட்டுமே விரும்புபவர்கள் எளிதில் துன்பம் எய்துவர்.
7. பெருந்தீனியை விரும்பி உட்கொள்பவர்க்கு, மிகுந்த பெரிய நோய்கள் எளிதில் உண்டாகும்.
8. தன் மனைவியல்லாத மற்ற பெண்களை விரும்பு பவர்க்குப் பெரும் பழி நேர்தல் எளிது.
9. பிறர் பாரத்தைத் (பிறர் சுமையைத்) தாங்கிக் காக்க வேண்டும் என்னும் அருள் உடையவர்கள், மற்ற வர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் எளிய செயலே; முடியாத தன்று.
10. எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்க்கு, பிறரைப் படுகொலை செய்தல் எளிது.
9. நல்கூர்தலாகக் (வறியதாகக்) கூறும் பத்துக் கருத்துகள்
1. கடல் சூழந்த உலகில் மக்களை ஆளும் அரசன் செங்கோல் முறை தவறின், அவன் ஆளும் நாடு நல்கூர்ந்த தாகும் - வறுமை யுடையதாகும்.
2. மிகவும் அகவை (வயது) முதிர்ந்தவன் காமத்தை விரும்புதல் - அதாவது மேலும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புதல் பயனற்றதாகும்.
3. உடன் இருந்துகொண்டே உள்ளத்தில் பகை கொண்டு செயலாற்றுபவனுடன் சேர்ந்திருத்தல் வறி தானதே - iணானதே.
4. பெரிய பிணியாளி பெறுகின்ற இன்பம் என்பது உண்மையான பயன் உடையதாகாது.