உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

175



“செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்து சின்னீர் ஐம்படை நனைப்ப” (3-137,138)
“அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்” (7.56,57)

என்னும் பாடல் பகுதிகளால் இதனை அறியலாம். மற்றும், சங்க இலக்கியம் முதற்கொண்டு பல்வேறு நூல்களில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது.

கணவனை இழந்தோர்

அந்தக் காலத்தில், கணவரை இழந்தவர் துயரம் தாளாமல் பெருமூச்சு எறிந்து உயிர் துறப்பராம்; அல்லது தீக்குளிப்பராம்; அல்லது தவநோன்பு கொள்வராம். இதனை,

“காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்தடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளிஏரி புகுவர்
நளிஏரி புகாஅ ராயின் அன்பரோடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர்” (2:42-48)

என்னும் பகுதியால் அறியலாம். இரட்டைக் காப்பியங் களுள் மற்றொன்றான சிலப்பதிகாரத்திலும், கணவனை இழந்தவர் பெருமூச்செறிந்து உயிர்விடுதல் கூறப் பட்டுள்ளது. இதற்குப் பாண்டிமாதேவி எடுத்துக்காட்டு.

“காதலற் பிரிந்த நோயோடு உளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (4:58,59)
“காதலற் கெடுத்த நோயோடு உளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனள் (22: 151,152)

என்பன சிலப்பதிகாரப் பகுதிகள். மறுமணம் செய்து கொள்ளாவிடினும் தவ நோன்பு கொள்ளலாம். ஆனால்,