உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மனத்தின் தோற்றம்



திக்குளிப்பு தேவையற்றது - கொடுமையானது - ஆண் பெண் சம நிலைக்கு முரணானது. அதாவது, இந்தக் காலத்திற்கு ஒவ்வாதது.

யானை முன் பறை

மதம் பிடித்த யானை வெளியில் செல்லின், மதயானை வருகிறது - அனைவரும் விழிப்பா யிருந்து தற்காத்துக் கொள்க என்று முன்னால் பறையறைந்து செல்வார்களாம்.

“ஒருபாற் படாஅது ஒரு வழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகம் களிமயக்கு உற்றென” (4:40-44)

என்னும் பகுதியில் ‘பாகும் (பாகரும்) பறையும்... அலவுற்று விளிப்ப’ என்றிருப்பது காண்க.

தொழுது பேசுதல்

அரசரிடம் ஒன்று பேசுவோர் முதலில் அரசனுக்கு வணக்கம் செய்தலும் வாழ்த்துச் சொல்லுதலும் வழக்கம். மணிமேகலை தெருவில் சென்றபோது, அவளைக் காலதர் (சன்னல்) வழியாகக் கண்ட எட்டி குமரன் என்பவன் வாசித்துக் கொண்டிருந்த யாழிசை பிழைபடச் செய்து அசையாதிருந்தான். அவனைக் கண்ட உதயகுமரன் என்னும் சோழ இளவரசன், நீ இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன என வினவினான். எட்டி குமரன் அரச குமரனை வணங்கிச் சொல்லலானான். இதனை,

“பாங்கிற் சென்று தான்தொழு தேத்தி
மட்டவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டி குமரன் எய்தியது உரைப்போன்” (4.62-64)