16
மனத்தின் தோற்றம்
மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தோம். அப்போது, சங்கத்தின் நிறுவனர், எனக்கு மறுப்பு தெரிவித்தவரை அமரும்படிச் சொல்லி விட்டார். அதோடு இது முடிந்தது. நான் பல இடங்களில், இது தொடர்பான வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் எனது கருத்தைக் கூறிவந்திருக்கிறேன்.
1982ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைக்குத் (Department of compilation) தலைவராகவும் பேராசிரியராகவும் அமர்த்தப் பெற்றேன் யான். அங்கு அடிக்கடிப் பலதுறைகள் பற்றிக் கருத்தரங்குகள் நடைபெறும் ஒரு நாள் மருத்துவத் துறைக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பல்வேறு மருத்துவத்துறைப் பிரிவிலும் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
எனக்குப் பெயர் நினைவில்லை. ஒர் உயர்தர மருத்துவ அறிஞர், பல்வேறு கருத்துகளைக் கூறிக்கொண்டிருந்த சொற்பொழிவின் நடுவிலே, ஏதோ ஒரு தொடர்பு பற்றி, 'மூளையின் இயக்கமே மனம் என்னும் கருத்தை உதிர்த்தார். யான் எனது கருத்தை ஒத்து நோக்கி மகிழ்ச்சி யுற்றேன்.
எனவே, மனம் என்பது, உடலின் உள்ளே உள்ள ஓர் உள்ளுறுப்பு அன்று; மூளையிலிருந்து தோன்றும் ஒரு வகை இயக்கமே மனம் முளையே மனத்தின் தோற்றம் - அதாவது, மனம் தோன்றும் இடம் மூளையே என்பது உறுதியாகிறது.