இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180
மனத்தின் தோற்றம்
- “சிரந்தெரிந்தன அரிந்தரிந்து குவைசெய்த
- பைரவர்கள் செங்கிலம்
- பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை
- பரிக்க வந்தவர் சிரிப்பரே” (51)
- “சிரந்தெரிந்தன அரிந்தரிந்து குவைசெய்த
எனவும், செயங் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில்,
- “வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
- திசைதோறும் விழித்து நின்று
- தூங்குதலை சிரிப்பன கண்டு உறங்குதலை
- மறந்திருக்கும் சுடர்க்கண் சூர்ப்பேய்”
- “வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
(கோயில் பாடியது-21)
எனவும் உள்ள பாடல்கள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன.
இறந்தோர் கோயில்
சிறந்தவர்கள் இறந்துவிடின் அவர்கட்குக் கோயில் எடுத்தல் மரபு. இதனை,
- “அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
- ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
- நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
- இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த
- குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
- சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்” (6:54-59)
என்னும் பகுதி அறிவிக்கிறது. சுடுமண் = செங்கல்.
பிணம் படும் பாடு
பிணத்தைச் சுடுவதும் பள்ளம் வெட்டியும் தாழியில் இட்டும் புதைப்பது மன்றி. அப்படியே முழு உருவத்துடன் தரையின் மேலே போட்டுவிட்டுப் போவதும் உண்டு எனத் தெரிகின்றது. சக்கர வாளக் கோட்டம் உரைத்த காதையில் இது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள