சுந்தர சண்முகனார்
181
- “சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்” (66)
என்னும் அடியில் சுடுவோர் என்றது எரித்தலையும், தொடு குழிப் படுப்போர் என்பது புதைப்பதையும், இடுவோர் என்பது வெளியிலே போட்டுவிட்டுப் போவதையும் குறிக்கும். இந்தக் காலத்தில், சுடுகாடு எனச் சுடும் பகுதியையும், இடுகாடு எனப் புதைக்கும் பகுதியையும் குறிப்பர். அந்தக் காலத்தில் வெளியில் இட்டுச் (போட்டுச்) செல்லும் பகுதியையே இடுகாடு என்பது குறித்ததாகத் தோன்றுகிறது. இதற்கு உரிய சான்று:-
பெண்களின் செம்பஞ்சு ஊட்டிய அழகிய அடிகளை நரிகள் கவ்விச் செல்கின்றனவாம். ஆடை உடுத்தி மறைத்திருந்த அல்குலைக் (பிறப்புறுப்பைக்) கழுகுகள் குடைந்து உண்கின்றனவாம். கடகம் அணிந்த கையை நாய் கவ்விச் செல்கிறதாம். சாந்து பூசிய எடுப்பான அழகிய முலைகளைப் பருந்துகள் கொத்தி உண்கின்றனவாம். ஒருபேய், பெண்ணின் தலையை முழவுபோல் கையில் ஏந்திக் கண்களைத் தோண்டி உண்கிறதாம். இத்தக் காட்சி.
- “வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
- அலத்தகம் ஊட்டிய அடிகரி வாய்க்கொண்டு
- உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
- கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு
- நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்
- கடகம் செறிந்த கையைத் தீகாய்
- உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
- சாந்தம் தோய்ந்த ஏங்திள வனமுலை
- காய்ந்தபசி எருவை கவர்ந்துண் ஒதையும்
- பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
- மண்கனை முழவ மாக ஆங்கோர்
- கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
- இரும்பேர் உவகையின் எழுந்தோர் பேய்மகள்