182
மனத்தின் தோற்றம்
- புயலோ குழலோ கயலோ கண்ணோ
- குமிழோ மூக்கோ இழதோ கவிரோ
- பல்லோ முத்தோ என்னாது இரங்காது
- கண்தொட்டு உண்டு கவையடி பெயர்த்து
- தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து” (6:109–126)
எனப் புனைந்துரைக்கப் பட்டுள்ளது. இதனால், பிணங்களைச் சுடாமலும் புதைக்காமலும் வெளியே போட்டுவிட்டுச் செல்லும் வழக்கமும் இருந்தது என்பது தெளிவு.
மணிமேகலை நூல் புத்த காப்பியம். புத்தமதம் மணிமேகலை காலத்தில் தமிழகத்தில் சமணம் போலவே பரவியிருந்தது. புத்தமதத்தினர் பிணங்கள் வீணாகாதவாறு பிற உயிர்கள் உண்ணட்டும் என வெளியில் அப்படியே போட்டு விட்டுச் செல்வது உண்டு என்பதற்கு வேறு சான்றுகளும் உண்டு.
புத்த மதத் தலைவரும் அரசியல் தலைவருமாகிய தலாய்லாமா திபேத்தில் இருந்த காலத்தில், செர்மானியர் ஒருவர் ஏழாண்டு காலம் அங்கிருந்தாராம். அவர் எழுதிய ‘திபேத்தில் ஏழாண்டுகள்’ என்னும் நூலின் தமிழ்மொழி பெயர்ப்பை யான் படித்தேன். திபேத்துப் புத்தமதத்தினர், பிணங்களைக் குறிப்பிட்ட மலைப் பகுதிகட்கு எடுத்துச் சென்று, கண்ட துண்டமாக வெட்டித் தூக்கித் தூக்கி எறிவராம். அவற்றைச் சில பறவைகளும் சில விலங்குகளும் பெற்று உண்ணுமாம். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். சிற்றும் சிவனுடைய திருவடிகளை மலரிட்டு வணங்காதவர் களும் திருப்பெயரை ஒதாதவர்களும் காக்கைக்கு இரையாகுவர் என்னும் கருத்தில், நாவுக்கரசர்,
- “பூகைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
- நாக்கைக் கொண்டரன் காமம் நவில்கிலார்