பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

187



பிள்ளை பெற்ற பெண்கள் தீட்டு கழிவதற்காக, வேப்பிலை - ஐயவி - தூமத்துடன் சென்று குளத்தில் குளிப்பார்களாம்:

“அரவாய்க் கடிப்பகை ஜயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும்” (7:73-76)

என்பது பாடல் பகுதி. அரவாய்=வேப்பிலை. வேப்பிலை யின் விளிம்பு அரம்போல் இருப்பதால் அரவாய் என்னும் பெயர் ஈயப்பட்டது.

குளத்தில் பச்சைத் தண்ணிரில் குளித்தார்கள் என்பது இக்காலத்து மேட்டுக்குடி மக்கட்கு வியப்பாயிருக்கலாம். இக்காலத்திலும் ஏழை எளியவர்கள் நிலை இதுதான். வசதி படைத்தவர்கள் பச்சைத் தண்ணீரைத் தொடுவதில்லை. வசதியற்ற ஏழைப் பெண் ஒருத்தி, மருத்துவமனையில் பிள்ளை பெற்று விட்டு வந்து, மூன்றாம் நாளே எருமுட்டை தட்டினாள். ஒரு ரிக்ஷா வண்டிக்காரன் மனைவி இவள், இந்தக் காட்சியை யான் கண்ணால் நேரில் கண்டேன். மற்றும், அந்தக் காலத்தில் விடுதோறும் கிணறு இருக்க வில்லை. நான் சிறுவனாய் இருந்த போது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிணறு உண்டு. எங்கள் வீட்டின் இரு புறங்களிலும் உள்ள (2 + 2 = 4) நான்கு வீடுகளில் கிண்று இல்லை. அவ்விட்டினர் எங்கள் கிணற்றில் நீர் எடுத்தனர். இப்போது அவர்களும் கிண்று தோண்டிக் கொண்டுள்ளனர்).

இருபதாம் நூற்றாண்டிலேயே இந்த நிலை எனில், பல நூற்றாண்டுகட்கு முன் வீட்டில் கிணறு இன்மையால் குளத்தில் குளித்ததில் வியப்பில்லை. வீட்டில் கிணறு இருப்பினும், திருக்கோயில் குளத்தில் குளிப்பது ஒரு நல்வினை (புண்ணியம்) என்று கருதினர். ஈண்டு,

“மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்” (1:1,2)