உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

195



‘திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு’ என்னும் தலைப்பில், திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஆராய்ந்து பிரெஞ்சு மொழியில் நூலொன்று படைத்தார். ‘பாப் (Fronz Bopp) என்பார் (1791-1867) இந்திய-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பிலக்கணம் இயற்றினார். ‘புரூக்மன்’ (Brugmann) என்பவர் (1849-1919) இந்திய - ஐரோப்பிய மொழிகட்குப் பொது ஒப்பிலக்கணம் படைத்தார். மற்றும், கோல் புரூக், கிரீம், மாக்ஸ் முல்லர், விட்னி முதலிய அறிஞர் சிலரும் இத்துறையில் ஈடுபட்டுப் பணியாற்றினர். இவ்வாறு இவர்கள் இந்திய - ஐரோப்பிய மொழிகளை ஆராய, ‘பிளீக்’ (Bleek) என்பவரோ, தென்னாப்பிரிக்க மொழிகளை ஆராய்ந்து அவற்றிடையே உள்ள ஒப்பிலக்கணக் கூறுகளைத் துருவியெடுத்துத் தந்து ‘தென்னாப்பிரிக்க மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (Comparative Grammar of the South African Languages)என்னும் நூலை வெளியிட்டார். இப்படியாக ‘ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) என்னும் கலைக்குள்ளேயே ‘ஒப்பிலக்கணம்’ என்னும் துறையும் ஒரு பிரிவினதாய் வளர்ந்து வரலாயிற்று.

கால்டுவெல் அவர்களின் படைப்பை அடிப்படையாகக் கொண்டு, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்கள் பல தோன்றலாயின. இந்தத் துறையில் தேவநேயப் பாவாணர், வேங்கடராசுலு ரெட்டியார் முதலிய அறிஞர்கள் பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இன்னும் இந்தத் துறை ஓர் எல்லையில் நின்றுவிடாமல் வளர்ந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராய்ந்து வெளியிடுவது ஒருபுற மிருக்க, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மொழி கட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராயும் முயற்சியிலும் அறிஞர் சிலர் ஈடுபடலாயினர். கால்டுவெல் அவர்களே