உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

மனத்தின் தோற்றம்



எண்ணுப் பெயர்களில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது, இருபத்திரண்டு, முப்பது, அறுபது, எழுபது, எண்பது தொண்ணுறு, நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்கள் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே மாதிரியா யிருப்பது குறிப்பிடத் தக்கது. மற்ற திராவிட மொழிகளில் இவ்வாறு இல்லை; சிறு சிறு மாற்றம் உண்டு.

‘ங்’ப் போல் வளை

மற்றும், மலையாளம் பற்றிய சுவையான செய்திகள் சில சொல்லவேண்டும். ‘ங முதல் ஙெள’ வரை தமிழில் உள்ள எழுத்துகளுள், இங்ஙனம், எங்ஙனம் என மட்டுமே பயன்படுகிறது. பங்கு, மங்கு என 'ங்' மெய்யும் பயன்படு கிறது. தனி ‘ங’ என்பதை ஒரு சொல் போல் கொண்டு அது ‘குறுணியளவு’ என்னும் பொருளைக் குறிக்கும் எனச் சித்தர் தேரையர் தமது ‘தைல வருக்கச் சுருக்கம்’ என்னும் நூலில் கூறியுள்ளார். இவ்வாறு ங், ங் என்பன மட்டும் பயன்படுகின்றன எனினும், தமிழ் நெடுங் கணக்கு (எழுத்து) வரிசையில் ங முதல் ஙௌ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதை எண்ணிய ஒளவையார், ங் என்பது தன் வரிசை எழுத்துகளும் இடம் பெறச் செய்தது போல, செல்வர்கள் தம்மைச் சார்ந்தவர்களையும் வளைத்து (சேர்த்துக் கொண்டு) நன்கு காக்க வேண்டும் என்னும் பொருளில் ‘ஙப் போல் வளை’ எனத் தம் ஆத்தி சூடி நூலில் கூறியுள்ளார்.

ஆனால், மலையாளத்திலோ, தேங்ங் - மாங்ங் - தங்ஙல் (தங்கல்) - ஏங்கல் (ஏங்கல்) என ‘ங’ என்னும் எழுத்து பயன்படுவதல்லாமல், ‘இடுங்ஙிய’ (ஒடுங்கிய) - துடங்ஙியவர் (துடங்கியவர்) - வாங்ஙிக்கான் (வாங்க) என ‘ஙி’: எழுத்தும், தாங்ஙு (தாங்கு) - நடுங்ஙு (நடுங்கு) - எங்ஙு