இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222
மனத்தின் தோற்றம்
என் காதலருடனேயே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம் - என்று தலைவி கூறினாளாம். பாடல் பகுதிகள் வருமாறு:
1. ‘வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து
- நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
- ஆலமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால்
- மால்வரை வெற்பன் மனஅணி வேண்டுதுமே’.
2. ‘கயிலைகன் மலையிறை மகனை நின் மதிநுதல்
- மயிலியல் மடவரல் மலையர் தம் மகளார்
- செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
- அயல் மணம்ஒழி; அருள் அவர் மணம் எனவே’.
3. ‘மலைமகள் மகனை கின் மதி நுதல் மடவரல்
- குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
- நிலையுயர் கடவுள்கின் இணையடி தொழுதேம்
- பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே’.
4. குலமகள் அவள் எம குலமகள் அவளொடும்
- அறுமுக ஒருவரின் அடியிணை தொழுதேம்
- துறை மிசை கினதுஇரு திருவடி தொடுநர்
- பெறுக நன் மணம், விடு பிழை மணம் எனவே’.
என்பன பாடல் பகுதிகள்.
முருகனை ஈர்த்துக் கவர, அவன் மனைவி வள்ளி தங்கள் குறக் குலத்தவள் என்று கூறியிருக்கும் நயமான பகுதி சுவைக்கத் தக்கது. இவ்வாறாகக் குன்றக் குரவையில் பல சுவைகளை நுகர்ந்து மகிழலாம்.
ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய இரண்டிலும், பல பாடல்களில், இரண்டாம் அடி திரும்பவும் மூன்றாம் அடியாக மடங்கி வரும் செய்யுள் அமைப்பைக் காணலாம். ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வோர் எடுத்துக்காட்டு வருமாறு:-