இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
223
- ஆய்ச்சியர் குரவை
- ‘முந்நீ ரினுள் புக்கு மூவாக் கடம் பெறிந்தான்
- மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
- மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
- கன்னலில் தோளோச்சிக் கடல் கடைந்தான் என்பரால்”.
- குன்றக் குரவை
- ‘எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
- கற்றீண்டி வந்த புதுப்புனல்
- கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையர்
- உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே’.
வந்த சொல்லே சொற்றொடரே மீண்டும் அடுத்து அடுத்து வருதல் நாடகத்தில் சுவை கூட்டும் ஓர் அமைப்பாகும் என்று The Art of Play Writing என்னும் நூலில் படித்தது இங்கே இப்போது நினைவிற்கு வந்து உவகை ஊட்டுகின்றது.
இவ்வாறாக, சுவையான சிறப்புச் செய்திகள் பல சிலம்பில் உள.