உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மனத்தின் தோற்றம்



ஒழுக்கம் குன்றினால் பிறப்புக்கெடும் என்று வள்ளுவர் கூறியிருப்பதால், ஒழுக்கத்தைக் கொண்டுதான் பார்ப்பான். பறையன் என்ற சாதிகள் வகுக்கப்பட்டன என்பது விளங்க வில்லையா?- என்று அவர்கள் சொல்லலாம். இக்குறளின் கருத்து இஃதன்று. ஒழுக்கத்தைக் குறித்தல்லாமல், தொழிலைக் குறித்தே சாதி வகுக்கப்பட்டது என்னும் நற் கருத்துக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் குறளோடு இந்தக் குறளும் ஆதாரமாகும்.

எங்ஙன மெனின் —

வள்ளுவர் இக்குறளில், பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்று மட்டும் சொல்லவில்லை; மறப்பினும் ஒத்துக் கொளலாகும் என்றும் கூறியிருப்பதை ஆழ்ந்தாராய வேண்டும். வேதம் ஒதலை மறந்தாலும் மறக்கலாம், ஒழுக்கத்தை - மறக்கலாகாது என்பதிலிருந்தே, வேதம் ஒதுதலும் மிக மிக இன்றியமையாதது என்பது புலப்படும். திருடரிடம் அகப்பட்டுக்கொண்ட வீரனொருவன், என் உயிரைவிட்டாலும் விடுவேன் இந்தப் பொருளை மட்டும் விடமாட்டேன்' என்கிறான். அப்படியென்றால், உயிர் விடக்கூடாத பொருள்-எல்லாவற்றினும் உயர்ந்த பொருள் என்பது தெரிகிறதன்றோ அதுபோலவே வேதமோதுதலும் மறக்கக் கூடாத ஒன்று-எல்லாவற்றைக் காட்டிலும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதும் புலப்படும். ஏனெனில், அவ்வேதம் ஒதிப் பிழைக்கும் தொழிலைக் கொண்டுதானே, அது செய்பவன் மறையவன் (பார்ப்பான்) என்று அழைக்கப் பட்டான்? ஆதலின் என்க!

எனவே பார்ப்பான், தான் பார்ப்பன சாதியான் என்று அழைக்கப் படுவதற்கே காரணமான-பிழைப்புத் தொழிலான வேத மோதலை மறக்கக்கூடாது; தப்பித்தவறி மறந்தாலும் மீண்டும் ஒதிக்கொள்ளலாம் - அல்லது வேறு தொழில் செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால்