உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

33


“ஆகாய வீதி உலாவிவரும் இந்த
ஆதித்தனோ உனது அன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ
விண்ணிலே கண்ணாக நிற்ப தேனோ?
காயும் கதிரவன் மேனியை நோக்க - உன்
கண்களும் கூசிக் கலங்காவோ?
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
நினைப்பதும் இல்லையோ? சொல் அடியே!
செங்கதிர் செல்லும் திசையது நோக்கி - உன்
செல்வ முகமும் திரும்புவ தேன்?
மங்கையே உன் மணவாள னாகில் - அவன்
வார்த்தை யொன்றும் சொல்லிப் போகானோ?
ஆசை கிறந்த உன் அண்ணலை நோக்கிட
ஆயிரம் கண்களும் வேண்டு மோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி! - கொஞ்சம்
பீத்தல் பெருமையும் வந்த தோடி?
மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
மாயப்பொடி வீசி நிற்கும் நிலை
கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?
கண்ணிர் உகுக்குமோ? யாரறிவார்!”

என்று கேட்பதுபோல் மிக இனிமையாகவும் நயமாகவும் பாடியுள்ளார். இப்பாடல்தொடரில், சூரியகாந்தி மலரின் கணவனாகச் சூரியனைக் குறிப்பிடுகிறார். அம்மலர் தன் மணவாளனாகிய கதிரவனையே என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறதாம். நேயம் மிகுந்தவனாதலால் அவன் தன்மேல் காய்வதற்கும் வருந்தவில்லையாம். அவனை மேன்மேலும் மயக்குவதற்காக, மஞ்சள் குளித்து முகம் மினுக்கி மாயப் பொடியும் (மகரந்தத் தூள்) வீசுகிறதாம். இந்தப் போட்டிக் காட்சியைக் கதிரவனது மற்றொரு மனைவியாகிய தாமரை மலர் கண்டால் எள்ளி நகையாடிச்