சுந்தர சண்முகனார்
43
மற்றும், தண்ணீருக்குள் வாழும் வேலம்பாசி என்னும் ஒருவகைச் செடியின் காதல் வாழ்வை ஆராய்ந்தோமாயின் வியப்பினும் வியப்பாயிருக்கும். இச்செடி தண்ணிருக் குள்ளேயே இருக்கும். மேல் மட்டத்தில் தெரியாது. மேலும் இஃது ஒரினப் பூஞ்செடி வகையைச் சேர்ந்ததாகும். அதாவது, சில செடிகளில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும்; சில செடிகளில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். இவற்றிற்குள் மகரந்தச் சேர்க்கை உண்டாக வேண்டுமே? அப்படி உண்டாக்குவதற்கு வண்டு முதலியனவும் தண்ணிருக்குள் முழுகி வரமுடியாதே. இந்நிலையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுக் கருவுறுவது எங்ஙணம்? இதற்காக இம் மலர்கள் கையாளும் வழி யாது?
தண்ணீருக்குள் இருக்கும் ஆண் வேலம்பாசிச் செடியிலிருந்து பருவம் முற்றிய ஆண் பூக்கள் பிரிந்து நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காதலியைத் தேடி மிதந்து திரிந்துகொண்டிருக்குமாம். அதேபோல நீருக்குள் இருக்கும் பெண் வேலம்பாசிச் செடியிலுள்ள பருவம் முதிர்ந்த பெண் பூக்கள் காதலர்களைத் தேடித் தாம்மட்டும் நீர் மட்டத்திற்கு மேலே வந்து தலையை நீட்டிக் கொண்டிருக்குமாம். இருக்கவே, ஏற்கெனவே மிதந்து கொண்டிருக்கிற ஆண் பூக்களிலிருந்து இப்பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை கிடைக்கிறது. கிடைத்ததும் பெண் பூக்கள் தண்ணிருக்குள் இறங்கிக் கருவுற்று வளர்ச்சி பெறுமாம். என்னே இயற்கையின் விந்தை இக் காட்சியை அடுத்து வரும் ஒவியத்தில் கண்டு தெளியலாம்:
வேலம்பாசிச் செடிகள்
இந்த ஒவியத்தில் வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி ஆண் செடியிலிருந்து பூக்கள் பிரிந்து மேல் நோக்கிச் சென்று மிதந்து கொண்டிருப்பதையும், பெண் செடி தனது பூவை