உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மனத்தின் தோற்றம்



உளவியல் கருத்து. தூண்டல் துலங்கல் என்றால் என்ன? இந்தக் கருத்தைத் தொழில்களின் வாயிலாகத் தெளிவு படுத்துவதற்குப் பின்வரும் விளக்கம் தேவைப்படுகிறது:-

தூண்டல் - துலங்கல்

மெய் வாய் கண் முக்கு செவி என்னும் ஐம்பொறிகளும் சுரப்பிகளும் தசையும் தண்டு வடத்தின் (spinal cord) வாயிலாக மூளையோடு தொடர்பு கொள்கின்றன. அவ்வாறே மூளையும் நேராகத் தொடர்பு கொள்ளாமல், தண்டுவடத்தின் வாயிலாகவே பொறிகள், சுரப்பிகள் முதலியவற்றோடு தொடர்பு கொள்கிறது. மூளைக்குக் கீழே தண்டுவடம் உள்ளது. அஞ்சல் நிலையமும் தொலை பேசி நிலையமும் போல, தண்டு வடமானது இடையே இருந்து, பொறிகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து பொறிகளுக்கும் செய்திகளை வாங்கிக் கொடுக்கிறது. எனவே, தண்டு வடத்தை, பல மறிவினைகளின் (Reflexes) இருப்பிடம் எனக் கூறலாம். இதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:-

கையில் ஒரிடத்தில் நெருப்புப் பட்டால், அந்த இடத்திலுள்ள உள் செல்லும் (Afferent) நரம்பு வழியாகச் செய்தி தண்டு வடத்துக்குச் செல்கிறது: அங்கிருந்து அச் செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது; நெருப்பினின்றும் கையை இழுத்துக்கொள்ளும்படி மூளை கட்டளை யிடுகிறது; அக்கட்டளையைத் தண்டு வடத்தின் வழியாக வெளிச் செல்லும் (Efferent) நரம்பு கைக்கு எடுத்துச் செல்கிறது; உடனே கை நெருப்பினின்றும் விலகுகிறது. இது, தண்டு வடம் செய்யும் ஒரு வகை மறிவினை (Reflex) ஆகும். இங்கே நெருப்பு ‘தூண்டல்’ (stimulus) ஆகும்; கையை இழுத்துக்கொள்வது ‘துலங்கல்’ (Response) எனப்படும்.

உள் செல்லும் நரம்புகள் (Afferent Nerves) மூளைக்கு ஐம்புல நுகர்ச்சி கிடைக்கச் செய்வதால் ‘புலன் நரம்புகள்’