உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

81



திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது; அது வருமாறு:-

"ஸ்வஸ்தி பூ திரிபுவனச் சக்கரவத்திகள் பூரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு பதினைந்தாவதில் எதிரா மாண்டு, ப்ரதாபச் சக்கரவர்த்தி ஹொய்சன ரீவீர நரசிம்ம தேவன் சோழ சக்கரவர்த்தியைக் கோப் பெருஞ்சிங்கன் சேந்த மங்கலத்தே பிடித்து கொடு வந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்து தேவாலையங்களும் விஷ்ணஸ்தானங்களும் அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி, சோழ மண்டல ப்ரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி நிலைநிறுத்தி அல்லது இக்காளம் ஊதுவதில்லை என்று தோர சமுத்திரத்தினின்றும் எடுத்து வந்து மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி, இவனையும் இவன்பெண்டு பண்டாரமும் கைக்கொடு பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ் சிங்கன் தேசமும் அழித்து சோழ சக்கரவர்த்தியையும் எழுந் தருளிவித்துக் கொடு என்று தேவன் திருவுள்ளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ரீமனு மஹாப்ரதானி பரம விச்வாளி தண்டிந கோபன் ஜகதொப்ப கண்டன் அப்பண தண்ணாக்கனும் சமுத்திர கோப்பய தண்ணாக்கனும் கோப்பெருஞ் சிங்கன் இருந்த எள்ளேரியும் கல்லியூர் மூலையும் சோழர்கோன் இருந்த தொழுதகையூரும் அழித்து, வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான் சீனத் தரையன், ஈழத்து ராஜா பராக்கிரம பாஹா உள்ளிட்ட முதலி நான்கு பேரை யும்...... கொன்று இவர்கள் குதிரையும் கைகொண்டு, கொள்ளிச் சோழ கோன் குதிரைகளையும் கைக் கொண்டு, பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து தொண்டை மானல்லூர் உள்ளிட தமுக்குர்களும் அழித்து அழி...... க்காடும் வெட்டிவித்து,