உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மனத்தின் தோற்றம்



வல்லி: சொல்லு சொல்லு!

குற: ஒருநாள் தலைவன் தெருவில் வந்தான். பந்தாடிக் கொண்டிருந்த நீ அவனைப் பார்த்து அஞ்சியதாகத் தெரி கின்றது. சரிதானே அம்மா!

வல்லி என்னடி நீ குறி சொல்லுவது? எல்லாவற்றையும் என் வாயிலிருந்தே வரவழைக்கப் பார்க்கின்றாய். அச்சத் தினால் இந்தக் காய்ச்சலும் கிறுகிறுப்பும் வருமா?

குற:- இல்லம்மே உள்ளத்தைச் சொன்னால் சீற்றம் வருமென்று ஒளித்தேன். உங்கள் காய்ச்சல் காமக்காய்ச்சல் அம்மே கிறுகிறுப்பு மோகக் கிறுகிறுப்பு அம்மே! இப்போது சரிதானா?

வல்லி:- என்னடி நான் பிறந்த வடிவமாய் இருக்கிறேன். இந்தக் கன்னியின்மேல் என்னென்னவோ பழி போடுகிறாயே! சரி, நான் ஒருவனைக் காதலித்தது உண்மையானால் அவன் பெயரைச் சொல்லடி.

குற:- பேராம்மே! அவன் பேர் "பெண் சேர வல்லான்” என்பது. அவன் உனக்குக் கட்டாயம் கிடைப்பான். (சிரிக்கிறாள்.)

வல்லி:- என்னடி மதம் உனக்கு இவ்வளவு ஏளனமாகச் சொல்லுகிறாய். நாக்கை அடக்கிப் பேசு.

குற:- இல்லையம்மா! பெண் என்றால் ஸ்திரி, சேர என்றால் கூட, வல்லான் என்றால் நாதன். “பெண் சேர வல்லான்' என்றால் 'திரிகூடநாதன் அதுதான் குற்றால நாதர் பெயர். அவர் உனக்குக் கட்டாயம் கிடைப்பார். உறுதி உறுதி உறுதி. சரிதானா (சிரிக்கிறாள்).

கேட்டாள் வசந்தவல்லி. உண்மை அதுதானே! அப்படியே நாணித் தலை கவிழ்ந்தாள். குறத்திக்குத் தகுந்த