பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மனமும் அதன் விளக்கமும் நானே இதற்கு நாயகமே” என்ற மனப்பாங்கோடு வாழ்க்கையினை நடத்துவதும் மன நலத்திற்கும், மன அமைதிக்கும் மிகச் சிறந்த வழியாகும். சமயப்பற்று இல்லாதவர்களும் தம்மைத்தானே ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் பயனக வாழ்க்கையை நடத்தத் தொடங்கினல் மனநலம் சிறக்கும். இதுவே வாழ்க் கையை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்கும். இன்னல்களை இன்முகத்தோடு ஏற்பதற்கும் மனநலம் கெடாமல் இருப்பதற்கும் நல்ல வழி. மனத்தைப் பற்றி இந்நூலிலே இதுவரை அறிந்து கொண்டவைக ளெல்லாம் இதற்கு உதவியாக நிற்கும் என்பது என்னுடைய கருத்து. இக்காலத்திலே மனநலம் குலைந்தோர் பெருகி வருவ தால் உளநோய் மருத்துவம், உளவியல் சிகிச்சை முதலியன தோன்றியிருக்கின்றன. மனநலம் குறைந்த வர்களென்ருல் அவர்களெல்லாரும் ைப த் தி ய மாகவோ, ஹிஸ்டீரியா முதலிய நோய்வாய்ப்பட் டிருபபவர்களாகவோ இருப்பவர்கள் என்று எண்ணி விடக்கூடாது. சாதாரணமாக வாழ்க்கை நடத்துபவர் களிடத்தும் இந்த மனநோய் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இருக்கலாம். அவர்கள் தங்களைத் தாங் களே தெளிவாகப் புரிந்து கொள்ளாததினலேயே இந்நோய் தோன்றுகிறது. அவ்வாறு புரிந்து கொள் ளுவதும் எளிதன்று என்பது முன்னலேயே கூறப் பட்டுள்ளது. ஒருவன் தன்னுடைய குறைபாட்டைப் பொதுவாக மற்றவர்கள் நோக்கும் கோணத்தை விட்டு வேறு ஒரு கோணத்திலே நோக்கி அது தனது தனித் திறமை என்றுகூட எண்ணிக்கொள்ளும்படி மனமே செய்துவிடும். பலபேருக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்கும் ஒருவர் முன்கோபியாக இருக்கலாம்.