பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன நலம் 99 ஆளுல் அவர் தாம் முன்கோபி என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலை நாட்டுவதில் கண்ணுங் கருத்துமாக இருப்பவர் என்று எண்ணிக்கொள்ளுவார். மனக் கோளாறுகள் எல்லாம் நனவிலி மனப்பகுதியில் ஏற்படும் சிக்கல்களை விடு விக்காததாலேயே உண்டாகின்றன என்றும் அதற்குப் பிராய்டு வகித்த மனப்பகுப்பியல் என்ற புகழ் பெற்ற முறையையும் நாம் முன்பே தெரிந்திருக்கிருேம். உளவியல் சிகிச்சையின் நோக்கங்களைக் கீழ்க்கண்ட வாறு வகுத்துக் கூறலாம். மன நோயாளிகள் பொது வாக வாழ்க்கையைப்பற்றித் தவருன கருத்துடையவர் களாக இருப்பார்கள். அவர்கள் காரணமில்லாது சில வெறுப்புக்களையும் உடையவர்களாக இருக்கலாம். தமக்கு நேர்கின்ற சிறிய துன்பங்களையும் பெரியன வாக நினைத்துக்கொள்ளலாம். உளவியல் சிகிச்சை இவற்றை மாற்ற முயல்கிறது. சிலர் உடலுக்கு ஏற் படும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் வல்லமை இல்லாதவர்களாக இருப்பார்கள். அதுபோலவே சிலருக்கு மனக்கவலையைப் பொறுத்துக்கொள்ளும் வல்லமை குறைவாக இருக்கும். இந்த வல்லமையைப் பெருக்குவதும் உளவியல் சிகிச்சையின் நோக்கமாகும். மன நோயாளிகள் தங்களுக்கு இயல்பாக அமைந் துள்ள திறமைகள், குறைபாடுகள் முதலியவற்றை நன்முக அறியாதவர்களாக இருப்பார்கள். அவற்றை உணர்ந்து தங்களுடைய ஆளுமையின்தரத்தை அறிந்து கொள்ளும்படி செய்வதுவும் சிகிச்சையின் மற்ருெரு நோக்கமாகும். நோயாளிகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதும், வாழ்க்கையை இன்பமும் மனநிறைவும் பெறுமாறு செய்வதுவும் இந்தச் சிகிச்சையின் முக்கிய மான முயற்சியாகும்.