பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்குப் பெருமை அண்மையிலே நான் ஒரு திரைப்படக் காட்சியைப் பார்த்தேன். மறைமனத்திலே ஏற்பட்டுள்ள சிக்கலை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் படம் உருவாகி யிருக்கிறது. உள்ளத்தைக் கவரும் கதை அது. அதிலே ஒரிடத்திலே ஒன்றுக்குப் பின் ஒன்ருக எத்தனையோ கதவுகள் திறக்கப் படுவது போல ஒரு காட்சியைக் கற்பனை செய்திருக்கிரு.ர்கள். முதலில் ஒரே கதவுதான் முன்னல் தோன்றுகிறது; அது திறக்கவில்லை. உள்ளே மற்ருெரு கதவு. அது திறந்ததும் மற்ருெரு கதவு. இப்படியே கதவுகள் ஒன்றுக்குப் பின் ஒன்ருகத் தோன்றுகின்றன. அவற்றிற்கு முடிவே இல்லை போலக் காண்கிறது. மனத்தின் பல நிலைகளையும், ஆழத்தையும் இவ் வாறு உருவப்படுத்தி அந்தக் காட்சியிலே காட்டியிருக் கிரு.ர்கள். மனம் அத்தனை மாயமானது. அதன் விந்தைச் செயல்களையெல்லாம் பொதுப்படையாக இதுவரை ஆராய்ந்தோம். மனம் என்ருல் என்ன என்று திட்டமாக எடுத்துச் சொல்ல முடியாவிட்டா லும் அதன் செயல்களை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் முக்கிய பகுதிகளாகிய நனவு மனம், நனவிலி மனம், நனவடி மனம் (வெளி மனம், மறை மனம், இடை மனம்) எவ்வாறு வேலை செய்கின்றன என்றும் பார்த்தோம். பகுதிகள் என்று கூறும்போது உண்மையில் இப்படிப் பகுதிகள் இல்லை என்றும் மனம் முழுமையானது என்றும் கண்டோம்.