பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்குப்பெருமை 1464 இந்த மனத்தின் பெருமையைப்பற்றியும், மாயத் தைப்பற்றியும் எடுத்து விளக்கிக் கவிஞர்கள் கவிதை புனைந்திருக்கிரு.ர்கள்;அடியார்கள் பாடியிருக்கிரு.ர்கள். மனக் குரங்கு என்றுகூடப் பழித்துக் கூறியிருக் கிரு.ர்கள். தத்துவப் பெரியார்களும் மனத்தை அடக்க முடியவில்லையே என்று வெளிப்படையாகச் சொல்லி யிருக்கிரு.ர்கள். மனத்தினலேயே மனிதனுக்குத் தனிப்பட்ட பெருமை ஏற்பட்டிருக்கிறது. மனம் என்பதொன் றில்லாவிட்டால் அவனுக்குப் பெருமையே இல்லை யென்று கூறலாம். அதன் உதவியாலேயே அவன் எத்தனையோ வியப்புக்குரிய செயல்களையெல்லாம் சாதித்திருக்கிருன். ஆனால், அது அவனைக் குழியில் தள்ளிவிடவும் செய்யும். மறை மனத்திலே மறைந்து கிடக்கும் இச்சைகள் பகுத்தறிவையும், மனச் சான்றை யும் ஏமாற்றிவிட்டு மேலெழுந்து ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடலாம். அதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நமது செயல்களையும், நோக்கங் களையும் அடிக்கடி அலசி ஆராய்ந்து மதிப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். இது எளிதன்று; ஏனெனில் அதற்கும் அந்த மனத்தையே நம்பவேண்டி யிருக் கிறது. அதற்குத்தான் மனத்தைப் பற்றிய அறிவு தேவைப்படுகின்றது. மனத்தின் தன்மைகளை உணர்ந்துகொண்டு அதைச் சரிவரப் பயன்படுத்தி நடந்தால் வாழ்க்கை யிலே வெற்றியடையலாம். கனவும், பகற்கனவும் மனத்தின் தன்மைகளை அறிய உதவுகின்றன. இயல் பூக்கங்கள், உள்ளக் கிளர்ச்சிகள், நினைவாற்றல், கற்பனை ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகள், பயன்கள் ஆகிய 7