பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமெனும் மாயம் 9 காரணமாக இருக்கவேண்டியதில்லை என்றும் அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கூறுகிருர்கள். அவர் கள் செய்த சுவையான சோதனை ஒன்றை இங்கே குறிப் பிடுகிறேன். உணவைக் கண்டதும் வாயிர் நீர் சுரப்பது சாதா ரணமான ஒரு செயல். ஒரு நாயின் முன்னல் உணவை வைக்கும்பேர்தெல்லாம் மணியோசை கேட்கும்படி யாகப் பல நாட்கள் தொடர்ந்து செய்தார்கள். உண வைக் கண்டபோதெல்லாம் நாயின் வாயில் நீர் சுரந்து கொண்டிருந்தது. பின்பு ஒருநாள் உணவைக்கொண்டு வராமலேயே மனியோசை மட்டும் கேட்கும்படி செய் தார்கள். அப்பொழுதும் அந்நாயின் வாயில் நீர் சுரக்கலாயிற்று. உணவைக் காணும்பொழுதே மணி யோசையைப் பலமுறை அந்நாய் கேட்டிருக்கிறது. அவை இரண்டும் ஒருங்கு தோன்றிய காலத்தில் நிகழ்ந்த வாயில் நீர் சுரக்கும் செயலானது மணி யோசையை மட்டும் கேட்டவுடன் உண்டாகத் தொடங்கியது. உணவைக் கண்டதாலும், மணி யோசையைக் கேட்டதாலும் ஏற்பட்ட உணர்ச்சிகள் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன. அவற் றின் பயனாக அங்கிருந்து ஒருவகை உணர்ச்சி தோன் றிச் செயல் நரம்பின் வழியாக வாய்க்குச் சென்று நீர் சுரக்கும்படி செய்கின்றது. இவ்வாறு கண் பார்வைக் கும் செவி உணர்விற்கும் வாயில் நீர் சுரப்பதற்கும் இடையே மாரு த ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அதல்ை மணியோசை மட்டும் கேட்கிற காலத்திலும் வாயில் நீர் சுரக்கத் தொடங்குகிறது. இந் நிகழ்ச் சிக்குக் காரணமாக மனம் என்பதொன்று இருக்க வேண்டியதில்லை என்று நடத்தைக் கொள்கையர் சொல்லுகிரு.ர்கள். எந்திரத்திலே ஏதாவது ஒரு விசைக்