பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () மனமும் அதன் விளக்கமும் கருவியை அழுத்தில்ை அதன் பயனக உடனே ஒரு குறிப் பிட்ட திகழ்ச்சியுண்டாவதுபோல உயிர்ப் பிராணி களிடத்தும் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு குறிப் பிட்ட செயல் விகழ்கின்றது என்பது அவர்கள் வாதம். சாதாரண எந்திரத்தின் தன்மையை எளிதாக அறிந்து கொள் ள முடியும். மனித எந்திரம் அதிகச் சிக்கல் களும் துண்மையும் வாய்ந்ததாகையால் அதன் தன்மையை அவ்வளவு எளிதாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இதுதான் இரண்டிற் குமுள்ள வேறுபாடு என் கிருர்கன் அவர்கள். வாழ்க்கையிலே பல விஷயங்களைப்பற்றி நாம் சிந்திக் கிருேம். சிந்தித்து முடிவுக்கு வந்த பிறகுதான் எதையும் செய்யவேண்டும் என் கிருேம். மனம் என்ப தொன்றில்லாவிட்டால் எவ்வாறு யோசனை செய்ய முடியும் என்று ஐயம் உண்டாகலாம். அதற்கும் நடத்தைக் கொள்கையர் விடை கூறுகிரு.ர்கள். சொற் களில்லாமல் சிந்திப்பதென்பது இயலாது. நாம் சிந்திக்கிருேமென்ருல் சொற்களின் மூலமாகத்தான் செய்கிருேம். பேசும்போது சொற்களை உச்சரிக்கிருேம். எண்ணும்போது சொற்களை உச்சரிப்பதில்லை. இருந் தாலும் சொற்கள் குரல்வளையிலுள்ள பல தசை நார் களின் நுட்பமான அசைவுகளிளுல் உருவாகின்றன. ஆதலால் எண்ணுவதென்பதெல்லாம் உச்சரிக்கப் படாத பேச்சுத் தான் என்றும், அதற்கு மனம் தேவை யில்லே என்றும் நடத்தைக் கொள்கையர் சாதிக் கிரு.ர்கள். அவர்கள் கூற்றை ஒப்புக்கொண்டு மனம் என்ப தொன்றில்லை என்று முடிவு சட்டிவிடலாமா என்ருல் அதிலும் பல ஐயங்கள் தோன்ற கின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் ஆராய்வோம்,