பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மனமும் அதன் விளக்கமும் வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புலன் உணர்வால் மட்டும் செயல் நிகழ்கிறதென்ரு ல் புல னுணர்விற்குக் காரணமாக ஏதாவதொன்று முன்ன லிருக்க வேண்டும். எதிர்காலத்திலே தோன்றக்கூடிய ஒன்று இன்று புலன் உணர்விற்குக் காரணமாக இருக்க முடியாது. எதிரில் ஒரு பழம் இருந்தால் அதைப் பற்றிய உணர்வு கண்களின் வழியாக மூளைக்குச் செல்லும். மூளையின் செய்கையால் அப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற செயல் உணர்வு கைகளுக்கு வரும். அத ைல், பழத்தை எடுத்துக் கொள்ளும் செயல் நிகழும். மெய் தான். ஆனல் பழம் எதிரிலே இல்லாவிட்டால் அந்தச் செயல் நிகழ (tբ Լգ.ա.1T 5. உயிர்ப் பிராணிகள் இதுபோன்ற புலன் உணர்வின் விளைவாகவே செயல் புரிகிறதில்லை. பின்னல் ஏற்படப் போகும் ஒரு நிலைமையை எண்ணிப் பார்த்தும் அவைகள் செயல் புரிகின்றன. இனப் பெருக்கத்தை எடுத்துக்கொள்வோம். முட்டை இடுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே காக்கைகள் கூடு கட்டத் தொடங் குகின்றன. குயில்கள் கூடு கட்டாவிடினும், தாமிட்ட முட்டைகளைத் தந்திரமாகக் காக்கைக் கூடுகளிலே சேர்க்கின்றன. இதுபோன்ற செய்கைகள் எல்லாம் புலன் உணர்வால் ஏற்பட்டவையல்ல. இவை இயல் பூக்கமாகச் (Instinct) செய்தவையாகும். எதிர்காலத்தில் விளைவனவற்றை எ ண் ணி ப் பார்த்து மனிதன் பல செயல்களேப் புரிகிருன், அவன் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற முயல் கிருன். அப்படிப் பட்டம் பெறுவதால் விளையப் போகும் நன்மையை எண்ணியே அவன் பெரு முயற்சி எடுத்துக்கொள்ளுகிருன். பின் ல்ை வரப்போவதை