பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மனமும் அதன் விளக்கமும் என்பதொன்றில்லாவிட்டால் இது இயலாதென்று நிச்சயமாகக் கூறலாம். மெக்டுகல் (McDougal) என்ற உளவியலறிஞர் மனம் என்ப்தொன்றுண்டு என்பதை விளக்க ஒரு அழகான சான்று காட்டு கிருர்: ஒருவருக்கு, உமது மகன் இறந்துவிட்டான்' என்று தந்தி வருகிறது. உடனே அவர் மூர்ச்சித்து விழுகிரு.ர். பிறகு ஒருவாறு தன் உணர்வு பெற்று எழுந்திருந்தாலும் அவருடைய பிற்கால வாழ்க்கையே மாறுபட்டுவிடுகிறது. ஆனல் அதே வேளையில் அருகிலிருந்து அந்தத் தந்தியைப் படித்த மற்ருெருவருக்கு இவ்வித மாறுதல்கள் ஏற் படுவதில்லை. முன்னவரிடம் சிறிதுபரிவு காட்டுவதோடு அவர் உள்ளக் கிளர்ச்சி நின்றுவிடுகிறது. ஒரே தந்தி வேறுவேருண உள்ளக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருக்கவேண்டுமானுல் அத்தந்தியில் கண்டுள்ள சொற் களில் பொருளை வேறுவேருக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் இருக்கவேண்டும். அந்த ஆற்றலுக்கு நிலைக்களகை இருப்பதுதான் மனம். எதிரிலே ஒரு திரையும் பல வண்ணங்களும் இருப்ப தாக வைத்துக்கொள்வோம். அவைகள் ஒரு வகை யான உணர்ச்சியை நமக்குத் தருகின்றன. ஆனல் திரையிலே வண்ணங்களை ஏற்றவாறு தீட்டிவிட்ட பிறகு வண்ணங்கள் என்றும் திரை என்றும் தனித்தனி உணர்ச்சி மறைந்து ஒரு அழகிய நங்கையின் உருவம் தென்படுகிறது. அ வ ளு ைட ய உணர்ச்சிகளும் தோன்றுகின்றன. முன்பு கண்ட வண்ணங்களே அந்த ஒவியத்தில் இருக்கின்றன. இவ்வாறு வண்ணங்களை ஒருங்கு சேர்த்து ஒரே பொருளாகப் பார்க்கும் ஆற்றல் நமக்