பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயக் குரங்கு 17 கள்ளைக் குடித்துக் கொண்டிருந்தால் வயிற்று வலியே அவனுக்கு வருவதில்லை. குடிகாரனைச் சமூகம் தாழ்வாக மதிக்கும் என்று அவன் அறிந்திருக்கிருன். இருந்தாலும் கள்ளின் மேலுள்ள ஆசைமட்டும் அவனை விடுவதாகக் காணுேம். அதல்ை அவனுடைய மனம் இது போன்ற ஒரு காரணத்தை அவனறியாமலேயே கற்பித்துக்கொடுத் திருக்கிறது. அந்தக் காரணம் முற்றிலும் சரியென்று அவனே நம்புகிருன். இவ்வாறு நிகழ்வதில் அவன் தன் காரணத்தைச் சரியானதென்று நம்புவதோடு இன்னும் ஒரு ஆச்சரிய மென்னவென்ரு ல் உடல் நிலையும் பல சமயங்களில் அதற்கேற்றவாறு அமைந்துவிடுகிறது. கள் குடிக்கா விட்டால் வயிற்றுவலி உண்மையாகவே அவனுக்கு வந்துவிடுகிறது. ஒரு சங்கீத வித்வான் தமது இசையரங்கிற்குக் கூட்டம் வராததற்குக் கீழ்வருமாறு காரணம் சொன்னர். “இன்றைக்குக் குதிரைப் பந்தயமல்லவா? அதல்ை எல்லாரும் அங்கே போயிருப்பார்கள்' என்ருர் அவர். உண்மையில் அவருடைய இசையரங்கு மக்களுக்குப் பிடிக்கவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதை மறைப்பதற்காக அவர் தெரிந்தே இந்தக் காரணத்தைக் கற்பித்திருக்கிரு.ர். இது போன்று அறிந்தோ அறியாமலோ காரணம் கற்பிக்கும் செயலுக்கு அறிவுப் பொருத்தந் தேடல் (Rationalisation) 676ảrgy GL uuri. =g(@96v Guo Gav கூறியது போல அறிவுப் பொருந்தத் தேடல் என்பது அவ்வளவு எளிமையானது மல்ல. அது இன்னும்