பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறை மனம் 21 என்பது தனியானதொன்று அல்ல என்பதை உணர வேண்டும். மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. கடலின் விரிந்த மேற்பரப்பை மனம் என்று சொன்னல் அப்பரப்பின் கீழ் ஆழ்ந்து மறைந்து நிற்கும் நீர்ப்பரப்பை மறை மனம் எனலாம். இரண் டும் வேறல்ல: ஒன்றேதான். கடலின் ஆழத்திலுள்ள தண்ணிர் சதா மேலே வந்து மேற்பரப்பின் வெப்பத்தை மாற்றுகிறது. அது போலவே மறை மனமும் நமது எண்ணம், செய்கை முதலியவைகளை மாற்ற முயலுகிறது. மறைமன ஆராய்ச்சியைக் கொண்டு ஒருவனுடைய நடத்தைக்குக் காரணம் கண்டு பிடிக்கிரு.ர்கள். குழந் தைப் பருவத்தில் அடக்கி வைக்கப்பட்ட பல ஆசை களும் உணர்ச்சிகளும் மறை மனத்தில் பதிந்து பிற் காலத்தில் பல வகையான செய்கைகளுக்குக் காரண மாகின்றன. அவைகளே ஒருவனுடைய தன்மையை யும் அமைக்கின்றன. ஆதலினலேதான் மறைமனத் தைப்பற்றி முதன் முதலில் விரிவான ஆராய்ச்சி செய்த சிக்மண்ட் பிராய்டு என்ற வியன்ன நகரத்து உளவிய லறிஞர் குழந்தைப் பருவத்திலேயே ஒருவனுடைய பிற்கால வாழ்க்கை அமைப்பு நிருணயமாகி விடுகிற தென்று சொல்லுகிரு.ர். மனப்போக்கு விருப்பம்போல மாறிமாறிஅமைவ தொன்றல்ல. அது பழைய உணர்ச்சிகளையும் அனுப வங்களேயும், இரு கரைகளாக உடைய ஒடை போன்றது. அவற்றிற்கு அடங்கித்தான் அது பொதுவாகச் செல்லு கின்றது. மனத்தின் இரு கூறுகளான வெளிமனமும் மறை மனமும் ஒன்றையொன்று வாழ்க்கை முழுதும் 2