பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மனமும் அதன் விளக்கமும் பாதிக்கின்றன. அதன் பயனக ஒருவனுடைய நடத் தையும் பண்பும் அமைகின்றன. மறை மனத்தில் மனித இனத்தின் அனுபவத்தால் வந்த சில உணர்ச்சிகளும் தனி மனிதனுடைய அனுப வத்தால் வந்த சில உணர்ச்சிகளும் இருப்பதாக டாக்டர் யுங் என்ற புகழ் பெற்ற உளவியலறிஞர் கருதுகிரு.ர். முதல் வகையில் இயல்பூக்கங்களும் மனித இனத்துக்கே பொதுவான ஆசைகளும் அடங்கி இருக் கின்றன. விலங்கு முதலிய பிறவிகளுக்கும் பொது வானவை சிலவும் உண்டு. காதல் உணர்ச்சி இயல்பாக உள்ளது. அதுபோலவே அச்ச உணர்ச்சியும். இவை யெல்லாம் பொதுவாக எல்லாருக்கும் ஏற்பட்டவை. இந்த இயல்பூக்கங்களைப் பற்றி வேறு பகுதியில் தனியே ஆராய்வோம். இவற்றுடன் பிறப்பிலிருந்து ஏற்பட்ட அனுபவங் களும் உணர்ச்சிகளும் மறை மனத்தில் நின்று ஒவ் வொரு மனிதனையும் தனித்தனிப் பண்புடையனக அமைக்கின்றது. அவ்வுணர்ச்சிகளைப் பற்றி இன்று நமக்கு நினைவு இராது. என்ருலும் அவையே நம்மை ஆட்டி வைக்கின்றன. நாம் பல பல எண்ணுகிருேம்: ஆசைப்படுகிருேம். ஆனல் அவற்றையெல்லாம் செயலில் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய ஆற்றல் இராது. சிலவற்றை நிறைவேற்றச் சமூகம் இடம் கொடுக்காது. சமூக விதிகள் ஒரு பக்கம்: நீதி நெறிகள் ஒரு பக்கம்: மதம் ஒரு பக்கம்-இவை யனைத்தும் சேர்ந்து நமது ஆசைகளையெல்லாம் நிறை வேற்றிக்கொள்ள இடம் தருவதில்லை. அதனல் பல எண்ணங்களையும் ஆசைகளையும் நாம் கைவிடவேண்டி