பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறை மனம் 23 யிருக்கிறது. சிலவற்றை அடக்கிக்கொள்ள வேண்டி யிருக்கிறது. இப்படி அடக்கப்பட்ட எண்ணங்களும் ஆசைகளும் மறை மனத்தில் பதிந்து வெவ்வேறு வகைகளில் நமக்கே தெரியாமல் வெளியாகின்றன. விநோதமாக நடந்து கொள்ளுதல், பெயர்களையும் ஊர்களையும் மறந்துவிடுதல், காரணமில்லாமல் அச்சமடைதல் முதலானவைகள் இதல்ை ஏற்படுகின்றன. பிறருடைய குற்றங்களையே எப்பொழுதும் பேசு வது சிலருடைய இயல்பாக இருக்கின்றது. சிலர் மற்ற வர்கள் சாதித்த நல்ல செயல்கள் அவ்வளவு பாராட் டிற்கு உரியனவல்ல என்று பேசுவார்கள். சிலர் தாம் மேற்கொண்ட பணிகள் நிறைவேரு தபோது பிறர் மேல் பழி சுமத்துவார்கள். இவைகளெல்லாம் மறை மனக் கோளாறுகள். சிலரிடம் ஏதாவது ஒருவகைக் குறைபாடிருக் கலாம். உடல் தோற்றம், அறிவுத் திறமை, ஒழுக்கம் இவை போன்றவற்றில் குறையுள்ளவர்கள் சமூக சேவை போன்ற ஏதாவது ஒரு துறையில் ஈடுபட்டு அதில் உயர்வடைய முயல்வார்கள். காதல் வாழ்க்கை கை கூடாத பலர் இலக்கியம், ஒவியம், இசை, விஞ்ஞானம், மதம் முதலிய துறைகளில் சிறந்தோங்கி யிருக்கிருர்க ளென்று சிக்மண்ட் பிராய்டு எடுத்துக் காண்பிக்கிரு.ர். தானே பெரியவன் என்று நிலைநாட்ட வேண்டும் என ஒவ்வொருவனுக்கும் ஆசையுண்டாகிறது. ஆனல் அந்த ஆசை நிறைவேரு மல் பலருடைய மனத்தில் அடங்கிக் கிடக்கிறது. மறை மனத்தில் அதனல் பல கோளாறுகள் உண்டாகின்றன. பொருமை, கொடுமை