பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுபட்ட கருத்துகள் 27 களிலும் சிலர் அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்வ தில்லை. ஆல்பிரடு ஆட்லர், டாக்டர் யுங் என்பவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள். பொதுவாக, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணர்ச்சிகளும், காம இச்சைகளுமே மறைமனத்தில் அழுந்திக் கிடப்பதாக பிராய்டு கூறுகிரு.ர். அவ் வுணர்ச்சிகள் மேலெழிந்து ஆதிக்கம் செலுத்த முயல் கின்றனவென்றும் மனிதன் அவற்றை அடக்க முயல் வதால் மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றதென் றும் அதன் விளைவின்படி அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றனவென்றும் அவர் விளக்கம் செய்கிருர். ஆட்லர் கூறுவது வேறு. அவர் கூறுவ தாவது:-ஒவ்வொரு மனிதனுக்கும் தான் தாவதொரு துறையில் தலைமைப் பதவி வகிக்கவேண்டுமென்ற ஆர் வம் இருக்கின்றது. அந்த ஆர்வமே அவனுடைய குறை பாடுகளே நீக்கிக்கொள்வதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கின்றது. அந்த ஆற்றலின் விளைவாக அவ னுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றன. டெமாஸ்தனிஸ் முதலில் திக்குவாயாக இருந்தார். ஆனல் பெரிய பேச்சாளராக வேண்டும் என்று உறுதி யோடு முனைந்து அதில் வெற்றியுமடைந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவருடைய வரலாறு ஆட்லரின் கருத்தை மெய்ப்பிக்கத் தக்க சான்ருக இருக்கிறது. மனிதனுக்கு ஒரளவு அதிகாரம் செலுத் தக்கூடிய வாய்ப்பில்லாவிட்டால் அவன் தாழ்மை உணர்ச்சியால் பீடிக்கப்படுகிருன் என்பது ஆட்லரின் கருத்து. மனிதனுக்குள்ளே விவரிக்க முடியாத ஒர் உயிர் வேகம் இருக்கிறது. அதிலிருந்துதான் பல இயல்புகள்