பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று பிரிவுகள் 10னம் என்பது ஒரு பொருளல்ல என்று கண் டோம். அது கை கால் போன்ற ஒரு உறுப்பு அல்ல என்ருலும் மனிதனிடத்திலே உள்ள மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு முக்கிய அம்சம் என்றும் கண்டோம். மனம் என்கிற மாயம் மனிதனுக்குத் தனிச் சிறப்பு அளிக்கிறதென்றும், அதை நனவு மனம் (வெளி மனம்) நனவிலி மனம் (மறை மனம்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாமென்றும் கண்டோம். மனத்திலே உண்மையில் இவ்விதமான பிரிவுகள் இல்லை. அது தொழிற்படும் வகையை ஒட்டி இப் பிரிவினைகள் கூறப்படுகின்றன. ஆராய்ச்சிக்கு எளிதாக இருக்கும் பொருட்டு இம்மனத்தை இன்னும் சற்று விரிவாக மூன்று பிரிவுகளாகச் செய்யலாம். நனவு மனம், நனவிலி மனம் என்ற இரு பிரிவுகளைப்பற்றி முன்பே அறிவோம். அந்த மூன்ருவது பிரிவு என்ன என்பதை இனிக் கவனிப்போம். நமக்கு எப்பொழுதோ ஒருமுறைஅறிமுகமானவர் ஒருவர் பல நாட்களுக்குப் பிறகு வருகிரு.ர். அவ ருடைய பெயர் நினைவிற்கு வருவதில்லை. கொஞ்ச நேரம் சிந்தித்துப் பார்க்கிருேம். பல பெயர்களைச் சொல்லிக்கூடப் பார்க்கிருேம். 'மனத்திலே இருக் கிறது; சொல்ல வரமாட்டேனென்கிறது' என்றும் சொல்லத் தோன்றுகிறது. பிறகு திடீரென்று பெயர் நினைவிற்கு வந்துவிடுகிறது. 'யார், மாணிக்கமா?