பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவும் கற்பனையும் வாழ்க்கையிலே எத்தனை எத்தனையோ நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன; எத்தனை எத்தனையோ அனுப வங்கள், புலன் உணர்ச்சிகள் உண்டாகின்றன. அவை களெல்லாம் மனத்திலே எங்கேயோ பதுங்கிக் கிடக் கின்றன. சிலவற்றை நினைத்த உடனேயே அவை நினைவுக்கு வந்துவிடுகின்றன. சில அவ்வளவு விரைவிலே நினைவுக்கு வருவதில்லை. சில மறந்தே போகின்றன: எவ்வளவு நேரம் முயன்று நினைத்துப் பார்த்தாலும் நினைவுக்கு வருவதேயில்லை. சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று உண்ட பொரியல் அல்லது சாம்பார் நினைவில் இருக்கிறதா? அது மறந்தே போகிறது. அப்படி மறந்து போவதும் நல்லதுதான். தேவையற்ற பலவற்றை நினைவில் வைத்திருந்தால் மனத்திற்கு அவை வீண் சுமை தானே? ஆளுல் அந்தச் செவ்வாய்க்கிழமையன்று உண்ட பொரியல் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுத் தொல்லை கொடுத்திருந்தால் அந்தப் பொரியலைப்பற்றிய நினைவு அவ்வளவு எளிதாக மறந்துபோவதில்லை. 'அப்பா, அந்த பொரியலைச் சாப்பிட்டு என் வயிறே கெட்டுப் போச்சு' என்று பல நாள் சொல்லிக்கொண்டே இருக் கிருேம். நமக்குத் துன்பத்தையோ, இன்பத்தையோ அளித்தவை நினைவில் இருக்கின்றன. அவற்றிலுங்