பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு "நான் கனவு கண்டால் கண்டது கண்டபடியே நடக்கும்" என்று சிலர் சொல்லிக்கொள்ளுகிருர்கள். 'கனவில் காண்பதற்கு நேர்மாருகத்தான் வாழ்க்கை யில் நடக்கும்; பொருளை இழப்பதுபோலக் கனவு கண் டால் பொருள் வருவாய் கிடைக்கும்” என்று வேறு சிலர் சொல்லுகிரு.ர்கள். 'கனவிற்கு ஒரு பொருளும் கிடையாது; அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை" என்று கூறுபவர்களும் உண்டு. "கவலையே இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிறவன் கனவு காண மாட்டான்; கவலை நிறைந்தவன்தான் கனவு காண்கிருன்” என்றும் பலர் பேசக் கேட்டிருக் கிருேம். உறங்கும்போது கனவு காண்பதென்பது குழந்தை கள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லாருக்கும் பல சமயங்களில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்ச்சி. அக் கனவிற்கு ஏதாவது காரணம் உண்டா, பொருளுண்டா அதல்ை ஏதாவது பயன் உண்டா என்பனவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். "ஒரு மனிதனுடைய தன்மையை அறிந்துகொள் வதற்கு அவன் காணும் கனவுகள் பெரிதும் துணை புரி கின்றன” என்று மறைமனத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பிராய்டு, ஆட்லர்,யுங் என்ற மூவரும் அறுதி யிட்டுக் கூறுகிரு.ர்கள். மன நிலையை அறிந்துகொள்