பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு 37 வதற்குக் கனவு ஒரு வழியென்பதை மற்ற உளவியல் அறிஞர்களும் ஒத்துக்கொள்ளுகிருர்கள். மனக் கோளாறுகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று பிராய்டு முதலில் கண்டார். அதன் பயனகவே மனத்தில் மறை மனம் என்ற ஒரு பகுதியிருக்கிறதென்றும் அவர் உணர்ந்தார். மன நோய்களைப் போக்குவதற்கு மறை மனத்தில் அழுந்திக் கிடக்கும் எண்ணங்களையும் ஆசை களையும் அறிய வேண்டும். அதற்குப் பிராய்டு முதலில் மனவசிய (Hypnotism) முறையைக் கையாண்டார். அதில் பல குறைபாடுகள் இருப்பதை அனுபவத்தில் தெரிந்து அவர் வேறு முறையொன்றைப் பின்னல் கையாளலார்ை. தம்மிடம் சிகிச்சைக்கு வருபவர்களை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களை யெல்லாம் தோன்றியவாறே ஒளிவு மறைவின்றிக் சொல்லும்படி கேட்டார். அவர்கள் காணும் கனவுகளைப் பற்றியும் வெளிப் படையாகச் .ெ சா ல் ல ச் சொன்னர். மனத்தில் எழுகின்ற இழிந்த எண்ணங்களே எல்லாரும் வெளிப் படையாகக் கூறமாட்டார்கள். மனவசியத்தாலும் அவற்றை அறிந்து கொள்ளுவது அவ்வளவு எளிதல்ல. ஆளுல் கனவுகளின் மூலம் அவற்றை மறைமுகமாகக் கண்டு கொள்ளலாம் என்று பிராய்டுக்குப் புலப் பட்டது. அவர்தாம் முதன் முதலில் கனவுகளேப் பாகுபடுத்தி அவற்றைக் கொண்டு மனநிலையைக் காண முயன்றவர். தூங்கி எழுந்தவுடன் பல கனவுகள் மறந்துபோய் விடுகின்றன. சிலவற்றை நாம் றினேவுக்குக் கொண்டு வர முடியுமானலும் அவை தொடர்பில்லாத விந்தைச் செயல்கள் நிறைந்திருக்கின்றன. அதனல்தால் கன 3