பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மனமும் அதன் விளக்கமும் வுக்குப் பொருளில்லையெனப் பலர் கருதுகிரு.ர்கள். கனவில் நிகழ்வனவற்றை நிகழ்ந்தவாறே உண்மை யென எடுத்துக்கொள்ளக்கூடாது. பல கனவு நிகழ்ச்சி களுக்குக் குறிப்பிட்ட வேறு பொருள்கள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டால்தான் கனவுகளைக் கொண்டு ஒருவனுடைய மன நிலையை நன்கு அறிந்து கொள்ள முடியும். கனவுக்குப் பொருளிருப்பதாக நினைப்பது குருட்டு நம்பிக்கை என்று சிலர் கூறலாம். அறிவு வளர்ச்சி பெருத மக்கள்தான் கனவை நம்புவார்களென்றும் அவர்கள் பேசலாம். ஆனல் பாமரர்கள் கனவை நோக்கும் விதம் வேறு; உளவியலறிஞன் அதை நோக் கும் விதம் வேறு. "விஞ்ஞானப் பார்வையோடு மற்றப் பொருள்களை ஆராய்வதைப் போலவே கனவையும் ஆராயலாம். கனவு என்பது ஒரு அனுபவ உண்மை . இரசாயனத்திலும், உடலியலிலும் உண்மைகளை ஆராய் வதுபோல அதையும் சரிவர ஆராயலாம்' என்று ஜீ. எச். கிரீன் எழுதுகிரு.ர். ஆதலால் கனவைப்பற்றி உளவியல் முறையில் சோதனை செய்வது அறிவுக்குப் பொருந்தியதொன்றே. அவ்வாறு சோதனை செய்து பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் பல மன நோய் களைப் போக்கியிருக்கிரு.ர்கள். மனத்தில் உள்ள எண்ணங்களையெல்லாம் மறைக் காமல் கூறுவதைச் சாதாரணமாக மக்கள் உடைத்துச் சொல்லுவதென்று கூறுவார்கள். ந - ன் உடைத்துப் பேசுகிறேனென் ருல் எதையும் ஒளிக்காமல் சொல்லுவ தாகப் பொருள். ஏதாவது ஒரு வேளையிலே எழுகின்ற எண்ணங்களேயெல்லாம் உடைத்துக் கூறினால் அவற் நின் மூலம் கனவுகளின் உண்மைப் பொருளையும் கனவு காண்பவனின் மன நிலைமையையும் அறிந்துகொள்ள