பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவும் மனமும் ச் னவைப் பற்றி மூன்றுவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று பாமர மக்களுடையது. அவர் களுக்குக் கனவிலே அறிவுக்குப் பொருந்தாத ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. தெய்வ வாக்காகவே அதை எடுத் துக் கொள்ளுவார்கள். மதிநுட்பம் வாய்ந்தவர்கள் கூடச் சில வேளைகளில் கனவில் தாம் கண்டவற்றைப் பின்பற்றி வாழ்க்கையில் நடக்கத் தொடங்குவார்கள். கனவு ஒருசில வேளைகளில் மெய்யாவதும் உண்டு. அந்த அனுபவ உண்மையை ஒட்டித்தான் நந்தனரின் கனவும் திரிசடையின் கனவும் தீட்டப்பட்டிருக் கின்றன. கனவு பலித்ததாகச் சிலர் கூறுவதையும் கேட்டிருக்கிருேம். இந்த நம்பிக்கையே சொப்பன நூல்கள் எழக் காரணம். அவை விஞ்ஞான முறை ஆராய்ச்சிக்குப்பொருந்துமா என்பதை ஊன்றி நோக்க வேண்டும். கனவைப் பற்றி மற்ருெரு கருத்து விஞ் ஞானிகளில் ஒரு சாரார் கொண்டிருப்பதாகும். கனவு கள் உண்டாவதற்கு உடல் நிலையே காரணம் என்று அவர்கள் கருதுகிரு.ர்கள்- உணவு செரிக்காமை, மலச் சிக்கல் போன்ற கோளாறுகள் மூளையைப் பாதித்து உறக்கத்திலே கனவுகளை உண்டாக்குகின்றனவென்றும் உறங்கிக்கொண்டிருக்கிற ஒருவன்மேல் ஒரு சொட்டுத் தண்ணிர் விட்டால் அவன் மழை பெய்வது போலக் கனவு காண்பான் என்றும் அவர்கள் கூறுகிரு.ர்கள். இதுபோன்ற சோதனைகள் செய்து கனவுகளையுண்டாக் கியும் இருக்கிரு.ர்கள்; நான் பல சிறுவர்களுடைய கனவுகளை ஆராய்ந்திருக்கிறேன். உறங்கும்போது