பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மனமும் அதன் விளக்கமும் சிறுநீர்ப், பையில் சிறுநீர் நிறைந்துவிட்டால் கனவு ஏற்பட்டு முடிவில் அதை வெளிவிடுவது போன்ற நிகழ்ச்சி ஏற்படுவதாகப் பலர் உரைக்கிறர்சள். அதன் காாணமாக உறக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகின்ற சிறுவர்களுமுண்டு. உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. மூன்ருவது கருத்தும் உளவியலை அடிப்படையாகக் கொண்டது. மன நிலையே கனவுக் குக் காரணமென் றும், உடற் கோளாருல் கனவு தொடங்கிலுைம், அதில் தோன்றுகின்ற நிகழ்ச்சிகள் மன ையைப் பொறுத் தவையே என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லு கிறர்கள். ஒரு துளி நீரைத் துரங்குகிறவன்மேல் தெளித்தால் மழை பெய்வது போலக் கனவு உண்டாக லாம். ஆனல் பலரைக்கொண்டு இச்சோதனையைச் செய்து பார்த்தால் எல்லாரும் ஒரேவிதமாகக் கனவு காண மாட்டார்கள் என்பது தெரியவரும். சிறு துாறல் விழுவதுபோல ஒருவன் கனவு காணலாம்; பெருமழை பெய்வதுபோல மற்ருெருவன் காணலாம். இடியும் மின்னலும் சேர்ந்திருப்பதாக வேருெருவன் காண லாம். மேலும், மழை பெய்வதுடன் வேறு பல நிகழ்ச்சிகளையும் அவர்கள் காண்பார்கள். அவைகள் ஒன்றிற்கொன்று மாறுபட்டிருக்கும். அவையெல்லாம் மன நிலையைப் பொறுத்தது என்று உளவியல் அறிஞர் கள் விளக்கம் தருகிரு.ர்கள். சிக்மண்ட் பிராய்டு தான் முதல் முதலில் கனவுகளைப் பாகுபடுத்தி அவற்றின் பொருளை விஞ்ஞான முறையில் அறிய முயன்றவர் என்பதை முன்பே கண்டோம். எல்லாக் கனவுகளும் ஆசை சிறைவேற்றத்திற் சாக ஏற்படுபவை என்பது பிராய்டின் கொள்கை.