பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவும் மனமும் 45 நனவில் கைகூடாத ஆசைகள் கனவில் கைகூடுவதால் மனத்திற்கு ஆறுதல் கிடைக்கிறது; நல்ல உறக்கமும் ஒய்வும் கிட்டுகின்றன; ஆதலால் கனவே உறக்கத்தைப் பாதுகாக்கிறது என்று அவர் சொல்லுகிருர், 'உறக் கத்தைக் கனவு பாதிப்பதில்லை; அதைப் பாதிக்கும் படியான மனச் சுமைகளை நீக்கி நல்ல ஓய்வைக் கொடுக்கக் கனவு முயல்கிறது." 'மறைந்து கிடக்கும் ஆசைகள் கனவில் நிறை வேறுவதால் மனத்தில் அமைதி ஏற்படுகின்றது. ஆனல் பிராய்டு கருதுவதுபோல எல்லாக் சனவுசளும் ஆசை நிறைவேற்றத்திற்காகவே உண்டாகின்றன என்ருல் ஆசை என்பதற்கு மிக விரிந்த பொருள் கொள்வது சரியல்ல" என்று பல உளவியல் அறிஞர்கள் எண்ணுகிரு.ர்கள். பொதுவாகக் கனவுகளை ஆராய்வது மிகச் சுவை யுடையது. ஒன்பது முதல் பன்னிரண்டு வரை வயதுள்ள சிறுவர்கள் கண்ட சிக்கலில்லாத சில கனவுகளைக் கீழே தருகிறேன். கனவு 1. 'நான் ஒரு பெரிய அரண்மனைக்குள் நுழைந்துவிட்டேன். அங்கு லட்டு, ஜிலேபி, எல்லாம் இருந்தன. நான் அவற்றை என் வாயில் எடுத்தெடுத் துப் போட்டுக் கொண்டேன். அப்பொழுது ஒரு பெரிய தடி மனிதன் வந்து என்னை அடித்தான். நான் அழுது கொண்டு விழித்துக்கொண்டேன்." கனவு 2. 'என் தகப்பனர் நூறு ரூபாய் கொடுத்து என்னை ஊருக்குப் போகச் சொன்னர். நான் போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒர் ஆகாய விமானம் வந்தது. நான் அதில் ஏறிக்கொண்டேன்.