பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவின் பொருள் 49 கனவுகள் பல இவ்வாறிருப்பினும் பிராய்டு கூறுவது போல் அவற்றை ஆராய்ந்து பொருள் கண்டால் மன நிலையையும் கோளாறுகளையும் அறிந்துகொள்ள முடியும். கனவை ஆராய்வதற்கு விருப்பக் கருத்தியைபு -முறையைக் கையாளுகிரு.ர்கள் என்று முன்பே குறிப் பிட்டேன். அம்முறையைப் பின்பற்றி ஆராய்ந்த ஒரு கனவை யும் அதன் பயனையும் சோதனை செய்தது போலவே கிழே தருகிறேன் : ப. என்ற நண்பர் கண்ட கனவு: 'உலாவச் சென்று கொண்டிருந்தேன். ஒரிடத்திலே ஒரு பாம்புப் புற்று இருந்தது. ஒளுன் ஒன்று பாம்பைப் பிடித்துத் தின்ன நினைத்து அந்தப் புற்றுக்குள் நுழைந்தது. நான் கொஞ்சம் தொலை போய்விட்டுத் திரும்பி அதே வழி யில் வந்தேன். உள்ளே சென்ற ஒளுன் வேகமாக வெளியே வந்து குதித்தது. பாம்பு அதைத் துரத்திக் கொண்டு வந்தது. என்னத் தாண்டித் துரத்திக் கொண்டே போயிற்று. ஒளுனைப் பாம்பு தன் வாயில் கவ்விக்கொண்டது.” சோதனை:-இரவு 74 மணிக்கு விருப்பக் கருத் தியைபு முறையில் சோதனை தொடங்குகிறது. எங்கும் நிசப்தம். அறைக்குள்ளே மங்கிய வெளிச்சம். நண்பர் ஒரு கட்டிலிலே கைகால்களை நீட்டிக்கொண்டு அமைதி யாகப் படுத்திருக்கிருர், நான் தலைக்குப் பக்கத்தில் பின்புறமாக அமர்ந்திருக்கிறேன். 'இப்பொழுது நீங்கள் கண்ட கனவில் சில பகுதி களைப் பற்றித் தனித் தனியாக உங்களிடம் சொல்லப் போகிறேன். ஒவ்வொன்றையும் கேட்டதும் அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அதன் காரணமாக