பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மனமும் அதன் விளக்கமும் தேளிருந்தன. பாம்பு வந்தால் என்ன செய்வதென்று அஞ்சுதல். சிறு வயதில் தாயுடன் படுத்திருந்தபோது படுக்கையடியில் ஒரு பாம்பு இருந்தது. அதைக் கண்டு தாய் அலறி நடுங்குதல்.” எனது நண்பருக்கு இப்பொழுது திருமணமாகி யிருக்கிறது. புது வீட்டில் தனிக் குடித்தனம் நடத்து கிரு.ர். அந்த வீட்டிற்கு எதிராக ஒரு கழனி யிருக் கிறது. பாம்பு அங்கே இருக்கலாமென ஐயம். மேலும் அவர் சில வேளைகளில் இருட்டிய பிறகு காட்டுப் பாதை வழியாக வீட்டிற்கு வரவேண்டி யிருக்கிறது. அதல்ை பாம்பைப் பற்றிய அச்சம் உள்ளத்திலே மேலெழுந்திருக்கிறது. சிறு வயதிலே வீட்டுக் கூரை பின் மீதும், படுக்கைக்குக் கீழும் பாம்பைக் கண்டதும், கணக்கராக இருந்த காலத்தில் அறைக்குள்ளே பாம் பைக் கண்டதும் பாம்பைப்பற்றிய அச்சத்தை மறை மனத்தில் உண்டாக்கியிருக்கின்றன. இன்று பாம்பைப் பற்றிய எண்ணம் ஏற்படவே பழைய உணர்ச்சியானது மனத்தில் தோன்றியிருக்கிறது. மேலும் தம் மனத்திலே உண்டாகும் பாம்பைப் பற்றிய அச்சத்திற்காக அவர் தாமே வெறுத்துக் கொள்கிருர். அதல்ை சிறு வயதிலிருந்து அருவருத்து வந்த ஒளுகைத் தம்ம்ை யே கனவில் காண்கிருர், பாம்பை அடித்து வெற்றி கொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதில் காண்கிறது. இவ் விளக்கத்தைக் கூறியபோது நண்பர் அதைப் பெரும்பாலும் ஒப்புக் கொண்டார். வேருெரு ஊரில் இருந்த காலத்தில் பாம்புக் கனவே கண்டதில்லையென்றும் கூறினர். சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம் இதுவரை நினைவிற்கு வந்ததில்லை என்றும் சொல்லி வியப்படைந்தார்.